வவுனியா தமிழர் பாரம்பரிய வாழ்வியல் உள்ளூர் சந்தை நிகழ்வு
வவுனியாவில் தமிழர் பாரம்பரிய வாழ்வியலும் உள்ளூர் சந்தையும் என்னும் நிகழ்வு சிறப்பாக இடம்பெற்றுள்ளது.
இந்நிகழ்வானது, வவுனியா பிரதேச செயலக பிரிவுக்குட்பட்ட மருக்காரம்பளை கிராம அலுவலர் பிரிவில் உள்ள மணிபுரம் கிராமத்தில் இந்நிகழ்வு இன்று (27.02.2024) இடம்பெற்றுள்ளது.
மருக்காரம்பளை சமுர்த்தி அபிவிருத்தி உத்தியோத்தர் என்.ஜெயராணி தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் தமிழர் பாரம்பரிய விளையாட்டுக்கள், நடனங்கள், வாழ்வியல் முறைகளை சித்தரிக்கும் நிகழ்வுகளும் இடம் பெற்று இருந்தன.
சத்துணவு திட்டம்
இதன்போது, முன்பள்ளி மாணவர்களுக்கான சத்துணவு திட்டமும் ஆரம்பித்து வைக்கப்பட்டதோடு உள்ளூர் சந்தையும் திறந்து வைக்கப்பட்டிருந்தது.
குறித்த நிகழ்வில், வன்னி நாடாளுமன்ற உறுப்பினரும், மாவட்ட அபிவிருத்திக் குழுத் தலைவருமான கு. திலீபன், வவுனியா பிரதேச செயலாளர் நா.கமலதாசன், உட்பட சமுர்த்தி அதிகாரிகள், ஊர்ப் பொதுமக்கள் எனப் பலரும் கலந்து கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |






புலம் பெயர் தமிழர்களால் சிறீலங்காவை இலங்கையாக மாற்றிக்கொள்ள முடியுமா..! 19 மணி நேரம் முன்

சூப்பர் சிங்கரில் ஏ.ஆர்.ரகுமான் ஹிட்ஸ் ரவுண்டில் சில போட்டியாளர்களுக்கு சர்ப்ரைஸ்.. என்ன தெரியுமா? Cineulagam

மனைவியும் மாமியாரும் தினமும் துஷ்பிரயோகம் செய்வதாக அதிர்ச்சி புகார்! ரகசிய கமெரா மூலம் அம்பலமான கொடுமை News Lankasri

மௌன ராகம் சீரியலில் நடித்த இந்த சிறுமியை நினைவு இருக்கா.. இப்போது எப்படி இருக்கிறார் பாருங்க Cineulagam
