வவுனியாவில் பெருமளவு கஞ்சா மீட்பு : மூவர் கைது
வவுனியாவில் (Vavuniya) பெருமளவிலான பணம் மற்றும் கஞ்சா போதைப்பொருளுடன் மூவர் விசேட குற்றப்புலனாய்வுப் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
குறித்த கைது நடவடிக்கையானது, நேற்றையதினம் (03.04) வவுனியா குற்றப்புலனாய்வு பிரிவினருக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
சந்தேக நபர்கள், கார் ஒன்றில் போதைப்பொருளை கடத்திச்செல்ல முற்பட்டுள்ள நிலையில் அதனை வழிமறித்த பொலிஸார் சோதனையில் ஈடுபட்டுள்ளனர்.
மேலதிக விசாரணை
இதன்போது, காரிலிருந்து ஒன்பது கிலோகிராம் கஞ்சா மற்றும் பத்தொன்பது இலட்சத்து ஐம்பதாயிரம் ரூபாய் பணமும் பொலிஸாரால் மீட்கப்பட்டுள்ளது.

வவுனியா, நெடுங்கேணி, ஒட்டுசுட்டான், ஆகிய பிரதேசங்களை சேர்ந்த 34, 27, 25 வயதுடைய நபர்களே இவ்வாறு கைதுசெய்யப்பட்டுள்ளனர்.
மேலும், கைது செய்யப்பட்டவர்கள் மேலதிக விசாரணைகளின் பின்னர் நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்த உள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
முள்ளிவாய்க்கால் பேரவலத்திற்கான நீதி.. இன்று வரை கேள்விக்குறியே! 2 மணி நேரம் முன்
நீதிமன்றத்தில் தடுமாறிய ஈஸ்வரி, அதிரடி காட்டிய ஜனனி... எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியல் புரொமோ Cineulagam
CM ஆன விஜய், அதற்கு எதற்கு அது வேண்டும்... மூன்று முடிச்சு சீரியல் நடிகர் நியாஸ் ஓபன் டாக் Cineulagam