யாழில் அதிரடி படையினரால் கைது செய்யப்பட்ட பொலிஸ் அதிகாரிகள்
யாழ்ப்பாணத்தில் (Jaffna) சட்டவிரோதமாக இறைச்சிக்காக மாடுகளை கடத்தி சென்ற பொலிஸ் உத்தியோகஸ்தர் உட்பட மூவர் பொலிஸ் விசேட அதிரடிப்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
புங்குடுதீவிலிருந்து மண்டைதீவு நோக்கி சட்ட விரோதமாக மாடுகள் கடத்துவதாக கிடைத்த இரகசிய தகவலுக்கு அமைய பொலிஸ் விசேட அதிரடிப்படையினர் நடத்திய சுற்றி
வளைப்பின் போது மூவரும் கைது
செய்யப்பட்டுள்ளனர்.
மேலும், கடத்திச் செல்லப்பட்ட எட்டு மாடுகள் பொலிஸாரினால் கைப்பற்றப்பட்டுள்ளதுடன் கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட வாகனமும் மீட்கப்பட்டுள்ளன.
மேலதிக விசாரணை
எனினும், சம்பவத்தில் கைது செய்யப்பட்டுள்ள பொலிஸ் உத்தியோகஸ்த்தர் யாழ் தலைமை பொலிஸ் நிலையத்தில் குற்ற விசாரணை பிரிவில் கடமையாற்றி வருவதாக தெரிவிக்கப்படுகிறது.
சம்பவம் தொடர்பாக பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |