வெளிநாடொன்றில் அடுத்தடுத்த பனிச்சரிவுகளில் சிக்கி 8 பேர் பலி
ஒஸ்திரிய ஆல்ப்ஸ் மலைத்தொடரில் சனிக்கிழமை ஏற்பட்ட அடுத்தடுத்த பனிச்சரிவுகளில் சிக்கி 8 பேர் உயிரிழந்துள்ளனர்.
கடந்த சில தினங்களாக அப்பகுதியில் பெய்து வரும் கனமழை மற்றும் கடும் பனிப்பொழிவு காரணமாக பனிச்சரிவு அபாயம் அதிகரித்துள்ள நிலையில் இந்த சம்பவம் நிகழ்ந்துள்ளது.
8 பேர் உயிரிழப்பு
சால்ஸ்பர்க் (Salzburg) அருகே உள்ள பொங்காவ் (Pongau) பகுதியில் ஏற்பட்ட இரண்டு வெவ்வேறு பனிச்சரிவுகளில் சிக்கி ஐந்து பேர் பலியாகினர்.

இதில் பின்ஸ்டர்கோப் (Finsterkopf) மலைப் பகுதியில் சறுக்கு விளையாட்டில் ஈடுபட்டிருந்த 7 பேர் கொண்ட குழுவில் நான்கு பேர் உயிரிழந்தனர். ஒருவர் படுகாயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
அதே பகுதியில் தனியாகச் சென்ற பெண் ஒருவரும் பனிச்சரிவில் சிக்கி உயிரிழந்தார்.
இதனைத் தொடர்ந்து, சுமார் 110 கிலோமீற்றர் தொலைவில் உள்ள புஸ்டர்வால்ட் (Pusterwald) பகுதியில் ஏற்பட்ட மற்றொரு பனிச்சரிவில் சிக்கி செக் குடியரசைச் சேர்ந்த (Czech) மூன்று வீரர்கள் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் உறுதிப்படுத்தியுள்ளனர்.
4 பேர் மீட்பு
இவர்களுடன் சென்ற மற்ற 4 பேர் மீட்புக்குழுவினரால் பாதுகாப்பாக மீட்கப்பட்டனர்.
மீட்புப் பணிகள் குறித்துப் பேசிய பொங்காவ் மலை மீட்புப் பிரிவின் தலைவர் கெர்ஹார்ட் கிரெம்சர் (Gerhard Kremser), "தொடர்ச்சியான எச்சரிக்கைகளையும் மீறி இச்சம்பவங்கள் நிகழ்ந்துள்ளன.

இது தற்போதைய பனிச்சரிவு அபாயத்தின் தீவிரத்தை வேதனையுடன் உணர்த்துகிறது" என்று தெரிவித்துள்ளார்.
கடந்த வாரத்தில் மட்டும் சுவிட்சர்லாந்து மற்றும் பிரான்ஸ் ஆகிய நாடுகளிலும் இத்தகைய பனிச்சரிவுகளால் பலர் உயிரிழந்துள்ள நிலையில், சுற்றுலாப் பயணிகள் எச்சரிக்கையுடன் இருக்குமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.
சோமாலிலாந்தை இஸ்ரேல் அங்கீகரித்தது ஏன்? 5 நாட்கள் முன்
அமெரிக்காவால் வெனிசுலாவுக்கு ஏற்பட்டுள்ள நெருக்கடி: கச்சா எண்ணெய் ஏற்றுமதி 75% வீழ்ச்சி News Lankasri
நிலாவுக்கு விவாகரத்து தரும் சோழன்.. அதிர்ச்சியில் நிலா.. அய்யனார் துணை சீரியலில் அடுத்து நடக்கப்போவது Cineulagam