பாகிஸ்தானில் பயங்கர தீ விபத்து! இதுவரையில் 6 பேர் பலி
பாகிஸ்தானின் கராச்சி நகரில் உள்ள பிரபல வணிக வளாகமான குல் பிளாசாவில் (Gul Plaza) சனிக்கிழமை இரவு ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில், ஒரு தீயணைப்பு வீரர் உட்பட 6 பேர் உயிரிழந்துள்ளனர்.
சனிக்கிழமை இரவு 10:45 மணியளவில் தரைத்தளத்தில் உள்ள ஒரு கடையில் ஏற்பட்ட மின் கசிவு (Short Circuit) காரணமாகத் தீப்பிடித்ததாக முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.
மீட்புப் பணிகள்
இந்தத் தீ மிக வேகமாக மற்ற தளங்களுக்கும் பரவியதால், சுமார் 1,200 கடைகளைக் கொண்ட இந்த வணிக வளாகம் முழுவதும் புகைமூட்டமும் நெருப்பும் சூழ்ந்தது.
Heartbreaking tragedy at Gul Plaza, Karachi.
— Shoaib Malik (@Shoaib_Malik01) January 18, 2026
Innocent lives lost, families shattered, livelihoods destroyed. May Allah grant the victims highest ranks in Jannah and give strength to the bereaved. 💔🤲#GulPlazaFire #KarachiFire #Karachi #PrayersForVictims pic.twitter.com/NPhsMlC9hA
ஞாயிற்றுக்கிழமை மதியம் வரை நீடித்த இந்தப் போராட்டத்தின் முடிவில், சுமார் 60 சதவீத தீயை தீயணைப்பு வீரர்கள் கட்டுக்குள் கொண்டு வந்தனர். தொடர்ந்து எரியும் தீயின் வெப்பம் மற்றும் அடர்ந்த புகை காரணமாகப் மீட்புப் பணிகள் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளன.
இந்த விபத்தில் 20-க்கும் மேற்பட்டோர் காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர், அவர்களில் சிலரது நிலைமை கவலைக்கிடமாக இருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
ஆழ்ந்த இரங்கல்
கட்டிடத்தின் ஒரு பகுதி இடிந்து விழுந்துள்ளதாலும், எஞ்சிய பகுதி பலவீனமடைந்து காணப்படுவதாலும் கட்டிடம் முழுமையாக இடியும் அபாயம் உள்ளதாக அதிகாரிகள் எச்சரித்துள்ளனர்.
6 people are burnt alive so far. 20+ injured. Initial report says the basement was illegal because occupancy capacity was 400 shops but a 1000 shops were operating. I can't share the footage of burnt bodies here. They were burnt alive because of administration. pic.twitter.com/JDRv3ydmaC
— Waqas انگاریہ (@WaqasAalam) January 18, 2026
இந்தச் சம்பவத்திற்குப் பாகிஸ்தான் ஜனாதிபதி ஆசிப் அலி சர்தாரி மற்றும் பிரதமர் ஷேபாஸ் ஷெரீப் ஆகியோர் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துள்ளதோடு, பாதிக்கப்பட்ட வர்த்தகர்களுக்குத் தேவையான அனைத்து உதவிகளையும் செய்ய உத்தரவிட்டுள்ளனர்.
சோமாலிலாந்தை இஸ்ரேல் அங்கீகரித்தது ஏன்? 5 நாட்கள் முன்
நிலாவுக்கு விவாகரத்து தரும் சோழன்.. அதிர்ச்சியில் நிலா.. அய்யனார் துணை சீரியலில் அடுத்து நடக்கப்போவது Cineulagam
அமெரிக்காவால் வெனிசுலாவுக்கு ஏற்பட்டுள்ள நெருக்கடி: கச்சா எண்ணெய் ஏற்றுமதி 75% வீழ்ச்சி News Lankasri