போர் பதற்றத்தின் மத்தியில் ஈரானின் கடும் எச்சரிக்கை
ஈரானின் உயர் தலைவர் அயதுல்லா அலி கமெனி மீது மேற்கொள்ளப்படும் எந்தவொரு தாக்குதலும் முழு அளவிலான போருக்குச் சமமாகவே கருதப்படும் என ஈரான் ஜனாதிபதி மசூத் பெசெஷ்கியான் கடுமையாக எச்சரித்துள்ளார்.
அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப், அலி கமெனியை படுகொலை செய்யவோ அல்லது நிர்வாகத்திலிருந்து அகற்றவோ முயற்சிப்பதாக வெளியான தகவல்களுக்கு வெளிப்படையான பதிலாகவே இந்த எச்சரிக்கை கருதப்படுகிறது.
போருக்குச் சமம்
சமூக ஊடகத்தில் வெளியிட்ட பதிவில்,
“நமது நாட்டின் மாபெரும் தலைவர் மீது நடத்தப்படும் எந்தவொரு தாக்குதலும், ஈரானிய தேசத்துடனான முழுமையான போருக்குச் சமமாகும்” என பெசெஷ்கியான் குறிப்பிட்டுள்ளார்.

கடந்த இரண்டு வாரங்களாக ஈரானை உலுக்கிய போராட்டங்களுக்கும், அதில் ஆயிரக்கணக்கானோர் உயிரிழந்ததற்கும் அமெரிக்காவே பிரதான காரணம் எனவும் ஈரான் ஜனாதிபதி குற்றம் சாட்டியுள்ளார்.
மேலும், ஈரானிய மக்களின் வாழ்க்கையில் ஏற்பட்டுள்ள துன்பங்கள் மற்றும் பொருளாதார நெருக்கடிகளுக்கு, அமெரிக்க அரசாங்கமும் அதன் கூட்டாளிகளும் விதித்துள்ள நீண்டகால தடைகள் மற்றும் விரோதக் கொள்கைகளே காரணம் எனவும் அவர் சுட்டிக்காட்டினார்.
பொருளாதார நெருக்கடி
இதனிடையே, Politico பத்திரிகைக்கு வழங்கிய நேர்காணலில், அலி கமெனியின் சுமார் 40 ஆண்டுகால ஆட்சிக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என ட்ரம்ப் வலியுறுத்தியிருந்தார்.
மேலும், கமெனியை “மோசமான நபர்” என குறிப்பிட்ட அவர், தன் நாட்டை சரியாக ஆளவும், மக்களை கொல்வதை நிறுத்தவும் வேண்டும் எனவும் எச்சரித்தார்.

ஈரானில் சமீபத்திய அமைதியின்மை டிசம்பர் 28ஆம் திகதி தொடங்கியது. உயர்ந்த பணவீக்கம், சரிந்த நாணய மதிப்பு மற்றும் பொருளாதார நெருக்கடி காரணமாக எழுந்த மக்கள் கோபம், தலைநகர் தெஹ்ரானிலிருந்து நாட்டின் பல பகுதிகளுக்கும் வேகமாகப் பரவியது.
இந்த போராட்டங்கள் பின்னர் கலவரமாக மாறிய நிலையில், ஜனவரி 8ஆம் திகதி ஈரான் அரசு இணையம் மற்றும் தொலைபேசி சேவைகளை பெருமளவில் முடக்கியது.
அமெரிக்கா தயார்
இதனிடையே, ஈரான் மீது தாக்குதல் நடத்தப்படும் என்ற செய்திகள் பரவிய நிலையில், ட்ரம்ப், ஈரானியர்களை போராட்டத்தை தொடரவும், அரசு அமைப்புகளை கைப்பற்றவும் வலியுறுத்தி, அவர்களுக்கு உதவ அமெரிக்கா தயாராக இருப்பதாகக் கூறி, பொதுமக்களைத் தூண்டியதாகவும் குற்றச்சாட்டுகள் எழுந்தன.
புதன்கிழமை, ஈரான் மீது இராணுவ நடவடிக்கைக்கு ட்ரம்ப் தயாரான போதிலும், அதிகரித்து வரும் பிராந்திய மற்றும் தூதரக அழுத்தங்கள் காரணமாக, அந்தத் திட்டத்தை ஒத்திவைக்க முடிவு செய்தார்.

மேலும், ஈரான் மீது தாக்குதல் நடத்தப்பட்டால், அதற்கான பதிலடிக்கு தாங்கள் தயாரில்லை என இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு, ட்ரம்பை எச்சரித்ததாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
அத்துடன், பிராந்திய ஸ்திரத்தன்மைக்கு ஏற்படும் அபாயங்களை கருத்தில் கொண்டு, சவுதி அரேபியாவின் பட்டத்து இளவரசர் முகமது பின் சல்மான் நிதானத்தை கடைப்பிடிக்குமாறு வலியுறுத்தியிருந்தார்.
ட்ரம்பின் நிலைப்பாடு
இந்த சூழலிலேயே, ஈரான் மீதான தாக்குதலை அமெரிக்கா தற்போது கைவிடுவதாக ட்ரம்ப் அறிவித்தார்.

போராட்டங்களில் ஈடுபட்டதாக கைது செய்யப்பட்டவர்களில் 800 பேரை ஈரான் தூக்கிலிட உள்ளதாக பரவிய தகவலைக் குறிப்பிட்டு, அந்த நடவடிக்கையை ஈரான் கைவிட்டால், அமெரிக்காவும் தாக்குதலை கைவிடும் என ட்ரம்ப் தெரிவித்திருந்தார்.
பின்னர், ஈரான் எடுத்த முடிவுக்கு ட்ரம்ப் நன்றி தெரிவித்த போதிலும், அலி கமெனி ஈரானின் நிர்வாகத்திலிருந்து நீக்கப்பட வேண்டும் என்ற தனது நிலைப்பாட்டை மீண்டும் வலியுறுத்தினார்.
இதற்குப் பதிலளிக்கும் வகையிலேயே, ஜனாதிபதி மசூத் பெசெஷ்கியான், அமெரிக்கா மற்றும் அதன் கூட்டணி நாடுகளுக்கு இந்த கடும் எச்சரிக்கையை விடுத்துள்ளார்.
சோமாலிலாந்தை இஸ்ரேல் அங்கீகரித்தது ஏன்? 5 நாட்கள் முன்
கிரீன்லாந்து விவகாரம்: 10% கூடுதல் வரி..! டிரம்பின் மிரட்டலுக்கு ஸ்டார்மர் கடும் எதிர்ப்பு News Lankasri
நிலாவுக்கு விவாகரத்து தரும் சோழன்.. அதிர்ச்சியில் நிலா.. அய்யனார் துணை சீரியலில் அடுத்து நடக்கப்போவது Cineulagam
அமெரிக்காவால் வெனிசுலாவுக்கு ஏற்பட்டுள்ள நெருக்கடி: கச்சா எண்ணெய் ஏற்றுமதி 75% வீழ்ச்சி News Lankasri