வர்த்தக நிலையங்களில் தண்டப்பணம் அறவீடு: மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர்
வவுனியா மாவட்டத்தில் வர்த்தக நிலையங்களில் இருந்து நீதிமன்றத்தின் ஊடாக 4 இலட்சத்து 65 ஆயிரம் ரூபாய் தண்டப்பணமாக அறவிடப்பட்டுள்ளதாக மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் தி.திரேஸ்குமார் தெரிவித்துள்ளார்.
தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் மூலம் கேட்கப்பட்ட கேள்விகளுக்கு பதில் அளிக்கும் போதே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.
வர்த்தக நிலையங்களுக்கு எதிராகவும் வழக்கு தாக்கல்
அத்துடன், வவுனியா மாவட்டத்தில் 01.09.2022 தொடக்கம் 15.10.2022 வரையான காலப்பகுதியில் 66 வர்த்தக நிலையங்கள் பாவனையாளர் அலுவல்கள் அதிகார சபையால் சோதனை செய்யப்பட்டன.
அதில் முறையாக சுட்டுத்துண்டில் தகவல் வழங்காமை தொடர்பாக 10 வர்த்தக நிலையங்களுக்கு எதிராகவும், காலாவதியான பொருட்களை விற்பனைக்கு வைத்திருந்தமை தொடர்பாக 20 வர்த்தக நிலையங்க்ளுக்கு எதிராகவும், நுகர்வோரை ஏமாற்றும் இயல்புடைய நடத்தையில் ஈடுபட விலையை மாற்றியமை தொடர்பில் 29 வர்த்தக நிலையங்களுக்கு எதிராகவும் விலை காட்சிப்படுத்தாமை தொடர்பில் 7 வர்த்தக நிலையங்களுக்கு எதிராகவும் வழக்கு தாக்கல் செய்யப்பட்டன.
குறித்த காலப்பகுதியில் மேற்குறித்த வழக்குகள் உட்பட 87 வழக்குகள் தாக்கல்
செய்யப்பட்டதுடன் நீதிமன்றத்தினால் 4 இலட்சத்து 65 ஆயிரம் ரூபாய் தண்டமாக அறவிடப்பட்டது எனவும் தெரிவித்துள்ளார்.

உள்ளூராட்சி தேர்தலில் விழிப்படைந்த சிறுபான்மை சமூகம் 1 மணி நேரம் முன்

மிக மோசமான அணு ஆயுதப் போராக வெடித்திருக்கும்... தடுத்து நிறுத்தினேன்: ட்ரம்ப் பேச்சால் சர்ச்சை News Lankasri
