வவுனியாவில் இரு குழுக்களுக்கு இடையே மோதல்: 5 பேர் வைத்தியசாலையில்
வவுனியாவில் இரு இளைஞர் குழுக்களுக்கிடையில் இடம்பெற்ற மோதல் காரணமாக ஒருவர் ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருவதுடன், மேலும் 4 பேர் காயமடைந்து வவுனியா பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
குறித்த மோதல் சம்பவம் நேற்று (15.07.2023) வவுனியா - பட்டாணிச்சூர் பகுதியில் உள்ள மோட்டர் சைக்கிள் விற்பனை நிலையம் ஒன்றின் முன்பாக இடம்பெற்றுள்ளது.
இந்த மோதலின் போது குறித்த பகுதியில் பயணித்த கார் ஒன்று வழிமறிக்கப்பட்டு தாக்கி சேதமாக்கப்பட்டுள்ளது.
மேலும், தாக்குதலில் பலத்த காயமடைந்தவர் வவுனியா, யாழ் ஐஸ்கிறீம் வீதியில் வசிக்கும் டிலான் (வயது 25) என்றும், அவர் வவுனியா வைத்தியசாலையில் அதிதீவிர சிபகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டு, மேலதிக சிகிச்சைக்காக யாழ்ப்பாணம் வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளார் என்றும் தெரிவிக்கப்படுகிறது.
ஊடகவியலாளர்களுக்கு அச்சுறுத்தல்
இந்நிலையில் தாக்குதல் சம்பவத்தில் 4 பேர் காயமடைந்து வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். தாக்குதலில் படுகாயமடைந்தவரின் சகோதர் மீதும் ஒரு குழுவினர் வவுனியா வைத்தியசாலையில் வைத்து தாக்குதல் மேற்கொண்டுள்ளனர்.
இதனையடுத்து வைத்திய வைத்தியசாலையில் பதற்ற நிலை ஏற்பட்டதுடன், வைத்தியசாலை முன்பாகவும் இரு இளைஞர் குழுக்களுக்கு இடையில் மோதல் ஏற்பட்டுள்ளது.
இதேவேளை, குறித்த சம்பவம் இடம்பெற்ற பட்டாணிச்சூர் பகுதிக்கு செய்தி சேகரிக்க சென்ற ஊடகவியலாளர்களுக்கும் அதே பகுதியைச் சேர்ந்த இளைஞர் குழு அச்சுறுத்தல் விடுத்ததையடுத்து அவர்கள் அங்கிருந்து வேறு இளைஞர்களால் பாதுகாப்பாக வெளியேற்றப்பட்டுள்ளார்.
மேலும், இதனையடுத்து சம்பவம் தொடர்பில் நெளுக்குளம் பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |

பங்கர் பஸ்டராக உருவெடுக்கும் இந்தியாவின் அக்னி ஏவுகணை - சீனா, பாகிஸ்தானுக்கு கடும் அச்சுறுத்தல் News Lankasri

திருமணத்திற்கு ஒப்புக்கொண்ட முத்துவை அசிங்கப்படுத்தும் அருண்.. சிறகடிக்க ஆசை சீரியல் பரபரப்பு புரொமோ Cineulagam
