வவுனியா நகரத்திற்கான பிரசார பணியை ஆரம்பித்த சுயேட்சைக் குழு
வவுனியா மாநகர சபையில் கோடாரி சின்னத்தில் போட்டியிடும் சுயேட்சைக் குழு -01, நகரப் பகுதிக்கான தமது பிரசார நடவடிக்கைகளை ஆரம்பித்துள்ளது.
வவுனியா, கந்தசாமி ஆலயத்தில் இடம்பெற்ற விசேட வழிபாடுகளின் பின் இன்று (09.04.2025) பிரசார நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது.
பிரசார நடவடிக்கை
இதன்போது, வவுனியா மாநகர சபை நகர கடைத் தொகுதி வட்டார வேட்பாளர் ஞா.பிரசாந், குடியிருப்பு வட்டார வேட்பாளர் சி.கிரிதரன் மற்றும் மாநகரசபையில் குறித்த சுயேட்சைக் குழு சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களும் கலந்து கொண்டுள்ளனர்.
இதன்போது கருத்து தெரிவித்த மாநகரசபை கடைத் தொகுதி வேட்பாளர், ''கடந்த காலஙகளில் மக்கள் வாக்களித்தும் நான் உட்பட எமது மக்களுக்கு சபைகளால் எநத நன்மையும் கிடைக்கவில்லை.
கட்சிகளுக்கு அப்பால சுயேட்சைகாக ஒரு இளம் வேட்பாளராக வவுனியா நகரில் களமிறங்கியுள்ளேன்.
மக்கள் தமது ஆதரவை எமது கோடாரி சின்னத்திற்கு தருவதன் மூலம் நீங்கள் எதிப்பார்க்கும் மாற்றத்தை எம்மால் ஏற்படுத்த முடியும்'' எனத் தெரிவித்துள்ளார்.