வவுனியா மாவட்ட வலிந்து காணமலாக்கப்பட்டோர் சங்க செயலாளர் வீட்டின் மீது தாக்குதல் (Photos)
வவுனியா மாவட்ட வலிந்து காணமலாக்கப்பட்டோர் சங்க செயலாளர் ஜெனிற்றாவின் வீட்டின் மீது கழிவொயில் வீச்சு சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.
யாழ். பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தினர் நேரில் சென்று குறித்த விடயம் தொடர்பாக ஆராய்ந்த நிலையில் சம்பவத்திற்கு தமது கடுமையான கண்டனத்தினை வெளியிட்டுள்ளனர்.
இது தொடர்பில் கருத்து வெளியிட்ட யாழ் பல்கலைக்கழக மாணவர் ஒன்றிய தலைவர் அழகராசா விஜயகுமார்,
மறைமுக அச்சுறுத்தல்
கடந்த 15ஆம் திகதி தேசிய தைப்பொங்கல் தினத்தினை யாழில் முன்னெடுத்த வேளை வலிந்து காணமலாக்கப்பட்டோர் சங்க செயலாளர் முன்னின்று ஜனநாயக ரீதியில் போராட்டத்தினை முன்னடுத்திருந்தார்.
இதற்கு மறைமுகமான அச்சுறுத்தல் விடுக்கும் ஒன்றாகவே இதனை நாம் நோக்குகின்றோம்.
ஆகவே தொடர்ச்சியாக காணமலாக்கப்பட்டோரின் நீதிவேண்டி போராடுகின்றவர்கள் மீதான வன்முறைகள் தடுக்கபடவேண்டும் என மேலும் வலியுறுத்தியுள்ளார்.
வட கிழக்கு வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள் சங்க தலைவி கண்டனம்
கிளிநொச்சியில் இன்று (28.01.2023) இடம் பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் உறவுகளைத் தேடி போராடி வரும் ஜெனிதாவிற்கு விடுக்கப்பட்ட அச்சுறுத்தலை கண்டிக்கிறோம் என வடக்கு கிழக்கு வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள் சங்க தலைவி கலா ரஞ்சினி தெரிவித்துள்ளார்.
வவுனியா மாவட்ட வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் சங்க செயலாளர் சிவானந்தம் ஜெனிதாவின் வீட்டிற்கு சிலர் கழிவு ஒயில் வீசியுள்ளனர், குறித்த சம்பவத்தையும் முல்லைத்தீவு மாவட்ட வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் சங்க தலைவிக்கும் விடுக்கப்பட்ட அச்சுறுத்தலையும் கண்டிப்பதாக அவர் தெரிவித்துள்ளார்.
அரச புலனாய்வாளர்களின் அச்சுறுத்தல்
அரச புலனாய்வாளர்கள் இவ்வாறு அச்சுறுத்தும் வகையில் நடந்துகொள்வதை கண்டிப்பதாக தெரிவித்த அவர், நாங்கள் ஆயுதம் ஏந்தி ஈழம் கோரி போராடவில்லை. எமது பிள்ளைகளை தேடியே போராடுகின்றோம்.
இலங்கை அரசிடம் நீதி கேட்டு போராடினோம். நீதி கிடைக்காமையால் சர்வதேசத்திடம் நீதி கேட்டு போராடுகின்றோம்.
நிச்சயமாக இலங்கை அரசு தண்டிக்கப்படும் எனவும் மேலும் தெரிவித்துள்ளார்.
மேலதிக செய்திகள் : காண்டீபன்

சரிகமப Li'l Champs சீசன் 4 திவினேஷ் ஆசையை நிறைவேற்றிய பாடகர் ஸ்ரீநிவாஸ்.. சந்தோஷத்தில் குடும்பம் Cineulagam

புதிய ஒப்பந்தம்... ஐரோப்பிய துருப்புகளுடன் ரஷ்யாவை எதிர்த்து களமிறங்கும் பிரித்தானியப் படைகள் News Lankasri
