வவுனியாவில் முதிரைக் குற்றிகளுடன் விபத்திற்குள்ளான வாகனம்: சாரதி மாயம்
வவுனியா, புதுக்குளம் பகுதிக்கு அருகாமையில் முதிரைக் குற்றிகளை ஏற்றிச்சென்ற வாகனம் ஒன்று விபத்திற்குள்ளான நிலையில், பொலிஸாரால் மீட்கப்பட்டுள்ளது.
குறித்த சம்பவம் இன்று(26.09.2025) காலை இடம்பெற்றுள்ளது.
வவுனியா, இரணை இலுப்பங்குளம் பகுதியில் இருந்து வவுனியா நோக்கி வந்து கொண்டிருந்த போது, அங்கு கடமையில் இருந்த பொலிஸாரால் குறித்த வாகனம் வழிமறிக்கப்பட்டுள்ளது.
மீட்கப்பட்ட வாகனம்
எனினும், அது நிறுத்தாமல் சென்றதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். இந்நிலையில், புதுக்குளத்திற்கு அண்மித்த பகுதியில் விபத்திற்குள்ளான நிலையில், பொலிஸாரால் அந்த வாகனம் மீட்கப்பட்டுள்ளது.
வாகனத்தில் இருந்த 11 முதிரைக்குற்றிகளை பொலிஸார் கைப்பற்றியிருந்தனர். வாகனத்தின் சாரதி மாயமாகியுள்ள நிலையில், ஈச்சங்குளம் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |



