வவுனியாவில் கட்டுப்பாட்டை இழந்த கப்ரக வாகனம் மோதியதில் ஒருவர் படுகாயம்
வவுனியா காமினி பாடசாலைக்கு முன்பாக ஏற்பட்ட விபத்தில் ஒருவர் படுகாயமடைந்த நிலையில் வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
நேற்று மாலை 5.30 மணியளவில் இடம்பெற்ற விபத்து சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,
வவுனியா பூங்கா வீதியில் இருந்து வவுனியா நகர் நோக்கி செல்ல முற்பட்ட பிக்கப் ரக வாகனம் ஒன்று வவுனியா நகரிலிருந்து குருமன்காட்டு பகுதி நோக்கி மன்னார் பிரதான வீதியில் பயணித்து கொண்டிருந்த, மோட்டார் சைக்கிளை மோதி தள்ளியதில் மோட்டார் சைக்கிளில் பயணித்த செட்டிகுளம் வைத்தியசாலை நிர்வாக உத்தியோகத்தர் படுகாயமடைந்த நிலையில் வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
பொலிஸார் விசாரணை

மன்னார் வீதியில் பயணித்து கொண்டிருந்த நிர்வாக உத்தியோகத்தர் மீது வவுனியா காமினி மகாவித்தியாலயத்திற்கு முன்பாக கட்டுப்பாட்டை இழந்த கப்ரக வாகனம் மோதியதில் குறித்த விபத்து இடம்பெற்றுள்ளது.
விபத்து சம்பவம் இடம்பெற்ற இடத்திலிருந்து முப்பது மீற்றர் தூரத்திற்கு மோட்டார் சைக்கிள் இழுத்து செல்லப்பட்டதுடன் விபத்தில் சிக்கிய உத்தியோகத்தர் காயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
குறித்த விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை வவுனியா போக்குவரத்து பொலிஸார்
மேற்கொண்டு வருகின்றனர்.




பிரித்தானிய வரலாற்றில் நடந்த மிகப்பெரிய கொடுமை., தாய்மார்களிடம் மன்னிப்பு கேட்ட பிரதமர் News Lankasri
குடும்பத்துடன் பிறந்தநாளை கொண்டாடியுள்ள CM விஜய்யின் அப்பா எஸ்.ஏ.சந்திரசேகர்... போட்டோஸ் இதோ Cineulagam
பிரான்சில் கைது செய்யப்பட்ட ஆட்கடத்தல்காரர்: ஊடகவியலாளர்கள் கண்டுபிடித்த அதிரவைக்கும் தகவல் News Lankasri
சட்டவிரோதமாக வெளியான விஜய்யின் ஜனநாயகன் படத்தை இத்தனை கோடி பேர் பார்த்துள்ளார்களா?... ஷாக்கிங் தகவல் Cineulagam