ராகமயில் பொலிஸ் ஊரடங்கு.. மஹர சிறைச்சாலையில் ஏற்பட்ட பதற்றநிலை
புதிய இணைப்பு
மஹர சிறைச்சாலை வளாகத்தைச் சுற்றியுள்ள மூன்று கிராம அலுவலர் கோட்டங்களில் மறு அறிவிப்பு வரும் வரை உடனடி பொலிஸ் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் செய்தித் தொடர்பாளர் ஏஎஸ்பி எஃப்.யு. வூட்லர் அறிவித்தார்.
அதன்படி, பின்வரும் கிராம அலுவலர் கோட்டங்களில் பொலிஸ் ஊரடங்கு உத்தரவு நடைமுறையில் உள்ளது,
246 கெண்டலியத்த வீதி மேற்கு
246 சி கெண்டலியத்த வீதி வடக்கு
181 ஜி தம்புவ
முதலாம் இணைப்பு
மறு அறிவிப்பு வரும் வரை ராகம பொலிஸ் எல்லைக்குள் பொலிஸ் ஊரடங்கு உடனடியாக நடைமுறைபடுத்தப்பட்டுள்ளது.
மஹர சிறையில் ஏற்பட்டிருந்த அமைதியின்மையைக் கட்டுப்படுத்தும் நோக்கத்தில் இந்நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் அறிவித்துள்ளது.
அதன்படி, மறு அறிவிப்பு வரும் வரை அப்பகுதியில் ஊரடங்கு உத்தரவை நடைமுறைபடுத்த பொலிஸ் நடவடிக்கை எடுத்துள்ளது.
மஹர சிறைச்சாலையில் பதற்றம்! ஒருவர் பலி - சிறைச்சாலைக்குள்ளிருந்து கேட்ட துப்பாக்கிச் சூட்டு சத்தங்கள்
ஐரோப்பாவை பதறவைத்த புலம்பெயர்தல்... மொராக்கோ நாட்டவர்கள் மீண்டும் நாடு திரும்பியது ஏன்? News Lankasri
கடத்தலில் இருந்து தப்பிய இளம்பெண்... சுற்றுலாப்பயணிகளுக்கு பயத்தை ஏற்படுத்தியுள்ள ஒரு செய்தி News Lankasri