2009 - 2026 வரை ஈழத்தமிழர்கள் உணராமல் போன ஆபத்தின் பக்கங்கள்..!
முள்ளிவாய்க்கால் இன அழிப்பின் பின்னர் தமிழர்களிடையே ஒரு பாரிய தலைமைத்துவ வெற்றிடம் ஏற்பட்டுள்ளதாகவும், இதனை தென்னிலங்கை சக்திகள் தங்களுக்குச் சாதகமாகப் பயன்படுத்தி வருவதாகவும் யாழ் மறைமாவட்ட கத்தோலிக்க ஊடக இயக்குநரான அருட்தந்தை அன்டன் ஸ்டீபன் குறிப்பிட்டார்.
மேலும், சர்வதேசம் தமிழர்களுக்கான நீதியைப் பெற்றுத்தரும் என்பதில் நம்பிக்கை கொள்ள முடியாது என்றும், அவர்கள் தங்கள் சொந்த லாபத்திற்காகவே இவ்வாறான விடயங்களில் ஈடுபடுவதாகவும் தெரிவித்தார்.
தமிழ் சமூகம் தனது பிழைகளை உணர்ந்து, ஒற்றுமையுடன் தங்களை சுய மீளாய்வு செய்து கொள்ள வேண்டும். தற்போதைய அரசியல் சூழலில், முறையான மற்றும் இதய சுத்தியுடன் செயல்படக்கூடிய தலைமைத்துவங்கள் இல்லாமையே இந்த வெற்றிடத்திற்கு முக்கிய காரணமாக அமைகின்றது.
வடக்கு, கிழக்கு மற்றும் புலம்பெயர் தமிழர்கள் என அனைவரும் தங்களின் தனிப்பட்ட சுயநலங்களைக் கைவிட்டு, ஒரு பொதுவான இலக்கை நோக்கி ஓரணியில் திரள வேண்டும்.
தங்களை தாங்களே வழிநடத்தக்கூடிய, பொதுநலனுக்காக அர்ப்பணிப்புடன் செயல்படும் புதிய தலைமைகளை உருவாக்க வேண்டும்.
வெளியில் இருந்து ஒரு தீர்வு வரும் என்று காத்திருக்காமல், நாமே அந்த வெற்றிடத்தை நிரப்ப முயற்சிக்க வேண்டும் என குறிப்பிட்டார்.
இந்த விடயங்களை விரிவாக ஆராய்கின்றது லங்காசிறியின் ஊடறுப்பு நிகழ்ச்சி..
மஹர சிறைச்சாலையில் பதற்றம்! ஒருவர் பலி - சிறைச்சாலைக்குள்ளிருந்து கேட்ட துப்பாக்கிச் சூட்டு சத்தங்கள்