வவுனியா - கட்டையர்குளம் காடழிப்பு! அறிக்கை சமர்ப்பிக்குமாறு அரச அதிபர் பணிப்புரை
வவுனியா - கட்டையர்குளம் பகுதியில் இடம்பெற்ற காடழிப்பு தொடர்பில் விசாரணை செய்து அறிக்கை சமர்ப்பிக்குமாறு அரச அதிபர் பிரதேச செயலாளருக்கு கடிதம் ஊடாக பணிப்புரை விடுத்துள்ளார்.
கட்டையர் குளம் கிராம அபிவிருத்தி சங்கம் காடழிப்பு தொடர்பில் அளித்திருந்த முறைப்பாடு தொடர்பில் உடன் விசாரணைகளை முன்னெடுத்து, அறிக்கை சமர்ப்பிக்குமாறு வவுனியா மாவட்ட செயலாளர் பீ.ஏ.சரத்சந்திர, வவுனியா பிரதேச செயலாளர் நா.கமலதாசனுக்கு கடிதம் ஊடாக பணிப்புரை விடுத்துள்ளார்.
இச்சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,
வவுனியா- கட்டையர்குளம் பகுதியில் வனஇலாகாவிற்கு சொந்தமான சுமார் 12 ஏக்கர் வரையிலான காடு கிராம அலுவர் ஒருவரின் ஆதரவுடன் அழிக்கப்பட்டிருந்தது.
இது தொடர்பில் கட்டையர்குளம் கிராம அபிவிருத்தி சங்கம் தடுத்து நிறுத்தியதையடுத்து, அதில் முன்னின்று செயற்பாட்ட பாடசாலை ஆசிரியர் ஒருவருக்கு எதிராக போலி முகநூலில் அவதூறை ஏற்படுத்தி பதிவுகள் இடப்பட்டிருந்தன.
பொலிஸாரிடம் வழங்கப்பட்ட முறைப்பாடு
இதனையடுத்து பாதிக்கப்பட்ட ஆசிரியர் கொழும்பு - சி.ஐ.டி மற்றும் வவுனியா - சைபர் கிராம் பொலிஸாரிடம் செய்த முறைப்பாட்டையடுத்து குறித்த கிராம அலுவலர் பொலிஸாரால் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளார்.
அத்துடன் குறித்த பதிவுகள் கிராம அலுவலரால் இடப்பட்டதாக பொலிஸார் தெரிவித்ததையடுத்து, பதிவுகளை பொலிஸ் தொழில்நுட்ப பிரிவின் ஊடாக அழித்திருந்தனர் என குறிப்பிப்படுகின்றது.
மேலும், அண்மைக்காலமாக பிரதேச செயலகத்தில் கடமையாற்றும் சில கிராம அலுவலர்கள் மற்றும் உத்தியோகத்தர்கள் தொடர்பில் கிடைக்கப்பெறும் முறைப்பாடுகளுக்கு பிரதேச செயலகம் உரிய நடவடிக்கை எடுப்பதில்லை என பொதுமக்கள் குற்றம் சாட்டி வருகின்றமையும் குறிப்பிடத்தக்கது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |

ஈழத் தமிழர் விடுதலைக்கு இனிச் செய்ய வேண்டியது என்ன..! 21 மணி நேரம் முன்

8 மடங்கு வேகமாக தாக்கும் ஹைப்பர்சோனிக் ஏவுகணை.., இந்தியாவால் பாகிஸ்தான், சீனாவுக்கு சிக்கல் News Lankasri

படுக்கையில் நெப்போலியன் மகன்... எலும்பும் தோலுமாக மாறியதற்கு என்ன காரணம்? நேரில் சந்தித்த பிரபலம் Manithan

மீனாவை பிரிந்திருக்கும் முத்துவிற்கு வீட்டிற்கு வந்ததுமே செம ஷாக், என்ன ஆனது... சிறகடிக்க ஆசை புரொமோ Cineulagam
