வவுனியா - பூந்தோட்டம் பொதுச்சந்தையில் சுகாதார சீர்கேடு: பொதுமக்கள் விசனம்
வவுனியா - பூந்தோட்டம் பொதுச்சந்தையில் கோழிக் கழிவுகளை சிலர் கொட்டுவதால் அந்த பகுதியில் சுகாதார சீர்கேடான நிலைமை உருவாகியுள்ளதாக பொதுமக்கள் குற்றம் சுமத்தியுள்ளனர்.
வவுனியா நகரசபையின் நிர்வாகத்தின் கீழ் உள்ள பூந்தோட்டம் பொதுச்சந்தை கடந்த சில மாதங்களாக இயங்காத நிலையில் உரிய பராமரிப்பின்றி காணப்படுவதாக தெரிவிக்கப்படுகின்றது.
பொதுமக்கள் விடுத்த கோரிக்கை
இந்நிலையில் அண்மைய நாட்களாக பொதுச்சந்தை வளாகத்தில் கோழி இறைச்சியின் கழிவுகளை குறித்த சிலர் வீசிச்செல்வதாக மக்கள் தெரிவித்துள்ளனர்.
இதனால் அந்த பகுதியில் சுகாதார சீர்கேடான நிலைமை உருவாகியுள்ளதுடன் வீசப்படும் கழிவுகளை மிருகங்கள், பறவைகள் காவிச்செல்வதால் அந்தபகுதியில் துர்நாற்றம் வீசும் நிலையும் உருவாகியுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
எனவே, குறித்த விடயம் தொடர்பாக வவுனியா நகரசபை கவனம் செலுத்தி கழிவுகளை வீசுவோர் மீது சட்டநடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுப்பதுடன் சந்தையினை புனரமைத்து மக்கள் பாவனைக்காக கையளிக்குமாறு கோரிக்கை விடுத்துள்ளனர்.
மேலும் பூந்தோட்டம் பொதுச்சந்தை நீண்ட காலமாக இயங்காத நிலையில் அதற்கு அண்மையில் பல தனியார் இறைச்சி விற்பனை நிலையங்கள் செயற்பட்டுவருகின்றமை குறிப்பிடத்தக்கது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |






விடுதலைப் போராட்டத்தை எப்படி முன்னெடுப்பது..! 2 நாட்கள் முன்

எதிர்நீச்சல் சீரியலில் என்ட்ரி கொடுத்துள்ள பிரபலம், அவரால் ஏற்படும் பரபரப்பு... எதிர்நீச்சல் தொடர்கிறது பரபரப்பு புரொமோ Cineulagam
