கசிப்பு உற்பத்தி நிலையம் முற்றுகை: சந்தேகநபர்கள் தப்பியோட்டம்
புதுக்குடியிருப்பு பொலிஸ் பிரிவிற்குட்பட்ட தேவிபுரம் பகுதியில் சட்டவிரோத கசிப்பு உற்பத்திக்கு தயாராக இருந்த கோடா, செப்பு சுருள்,பரல் என்பன இன்றைய தினம் கைப்பற்றப்பட்டுள்ளது.
பொலிஸ் விஷேட புலனாய்வு பிரிவினருக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலையடுத்து புதுக்குடியிருப்பு பாெலிஸார் இன்றைய தினம் (05.11.2025) காலை தேவிபுரம் பகுதியில் மேற்காெண்ட சுற்றிவளைப்பில் கைப்பற்றப்பட்டுள்ளது.

புதுக்குடியிருப்பு பாெலிஸார் விசாரணை
இதன்பாேது கசிப்பு உற்பத்திக்கு தயாராக இருந்த 11,69,500 மில்லி லீற்றர் கோடா, செப்பு சுருள் , 7 பரல்கள் என்பன புதுக்குடியிருப்பு பாெலிஸாரினால் கைப்பற்றப்பட்ட நிலையில், கசிப்பு உற்பத்தி நடவடிக்கையில் ஈடுபட்டிருந்த சந்தேகநபர்கள் பொலிஸாரின் வருகையை உணர்ந்து தப்பியோடியுள்ளனர் என்று தெரிவிக்கப்படுகின்றது.
குறித்த சந்தேகநபர்களை தேடி வருவதாகவும், குறித்த சம்பவம் தாெடர்பான மேலதிக விசாரணைகளை புதுக்குடியிருப்பு பாெலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |




தமிழர் அரசியலும் சிங்கள பௌத்த அரசியல் மனநிலையும்.. 20 மணி நேரம் முன்
12 ஆண்டுகளுக்குப் பிறகு நிகழும் குரு–சூரியன் சேர்க்கை : உச்சகட்ட அதிர்ஷ்டம் பெறும் டாப் 4 ராசிகள்! Manithan
அவன் தலையிலேயே அடித்தேன், தலை உடைந்து ரத்தம் கொட்டியது.. சிறு வயது சம்பவத்தை கூறிய நடிகை கயாடு லோஹர் Cineulagam
படப்பிடிப்பு தொடங்கும் முன்பே விஜய் சேதுபதி-மணிரத்னம் பட வியாபாரம் முடிந்தது... இத்தனை கோடியா? Cineulagam