வவுனியா எரிபொருள் நிரப்பு நிலையத்தில் பிரதேச செயலக உத்தியோகத்தர் மீது தாக்குதல் முயற்சி
வவுனியா, 4ம் கட்டை எரிபொருள் நிரப்பு நிலையத்தில் ஒன்லைன் பதிவு நடவடிக்கையை ஒழுங்குபடுத்தி மேற்கொண்ட பிரதேச செயலக உத்தியோகத்தர் மீது தாக்குதல் முயற்சி மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இன்று மாலை இடம்பெற்ற இச்சம்பவம் குறித்து மேலும் தெரியவருவதாவது,
வவுனியா, 4ம் கட்டை ஐஓசி நிறுவனத்திற்கு சொந்தமான எரிபொருள் நிரப்பு நிலையத்தில் பெட்ரோல் விநியோகம் கடந்த இரு தினங்களாக இடம்பெற்றது.
உத்தியோகத்தர் மீது தாக்குதல் முயற்சி
இதன்போது நபரொருவர் தனது மோட்டார் சைக்கிளுக்கு பெட்ரோல் நிரப்ப வந்த போது குறித்த நபர் நேற்றைய தினம் (30.06) இங்கு எரிபொருள் நிரப்பியதாக தெரிவித்து அங்கு கடமையில் இருந்து பிரதேச செயலக உத்தியோகத்தர் திருப்பி அனுப்பியிருந்தார்.
இதனையடுத்து, கடமை முடிந்து குறித்த உத்தியோகத்தர் எரிபொருள் நிரப்பு நிலையத்தை விட்டு தனது மோட்டார் சைக்கிளில் வெளியேறிய போது அந்த உத்தியோகத்தரை முற்றுகையிட்ட சிலர் அவரை தகாத வார்த்தையால் பேசி தாக்குதல் மேற்கொள்ள முயற்சித்துள்ளனர்.
இதன்போது குறித்த உத்தியோகத்தர் அவர்களிடம் இருந்து மோட்டார்
சைக்கிளில் தற்துணிவுடன் தப்பிச் சென்றிருந்தார்.