கறுப்பு சந்தையில் 2500 ரூபாய் வரையில் அதிகரித்துள்ள பெட்ரோல் விலை
வவுனியாவில் கறுப்பு சந்தையில் பெட்ரோல் 2500 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுவதாக பொது மக்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.
வவுனியாவில் எரிபொருள் விநியோகம் முறையான கட்டமைப்பின் கீழ் இல்லாமையினால் எரிபொருள் மாபியாக்கள் பெட்ரோலை எரிபொருள் நிரப்பு நிலையங்களில் தொடர்ச்சியாக பெற்று அதனை 2500 ரூபாய் தொடக்கம் 3000 ரூபாய் வரை விற்பனை செய்து வருகின்றனர்.
எரிபொருள் விற்பனை மாபியாக்கள் அதிகரிப்பு
எரிபொருள் விற்பனை மாபியாக்களின் செயற்பாடு காரணமாக எரிபொருள் அவசியமானவர்கள் கூட எரிபொருள் நிரப்பு நிலையங்களின் சீராக சென்று பெட்ரோல் பெற முடியவில்லை எனவும், கறுப்பு சந்தை வியாபாரிகள் குறித்த வரிசைகளில் புகுந்து எரிபொருளை பெற்று விற்பனை செய்து வருகின்றனர் எனவும் பொதுமக்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.

பிரதேச செயலகத்தால் ஒன்லைன் பதிவு இடம்பெறுகின்ற போதும் அது
வவுனியா மாவட்டத்தில் அனைத்து எரிபொருள் நிரப்பு நிலையங்களிலும்
நடைமுறைப்படுத்தபடவில்லை. இதனால் அரச மற்றும் தனியார் துறைகளில் வேலை செய்வோர் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளனர்.
நள்ளிரவில் மாயமான பல்கலைக்கழக மாணவர்... நான்கு வாரங்களுக்குப்பிறகு தெரிய வந்த அதிர்ச்சி சம்பவம் News Lankasri
சரிகமப: தனியாக வந்த சிறுமிக்காக பாடகி சைந்தவி செய்த விடயம்... கண்ணீர் மல்க வைக்கும் காட்சி! Manithan
எதிர்பார்ப்பை உண்டாக்கியுள்ள 'சிறை' திரைப்படத்தின் முதல் விமர்சனம்.. படம் எப்படி இருக்கு தெரியுமா? Cineulagam