எரிபொருள் மற்றும் எரிவாயு இறக்குமதியில் தலையிடும் ராஜபக்சவினர்: பாட்டலி சம்பிக்க ரணவக்க-செய்திகளின் தொகுப்பு
எரிபொருள் மற்றும் எரிவாயு இறக்குமதி நடவடிக்கைகளில் ராஜபக்ச குடும்பத்தின் உறுப்பினர்கள் கடும் தலையீடுகளை மேற்கொள்வதாக ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் பாட்டலி சம்பிக்க ரணவக்க தெரிவித்துள்ளார்.
கொழும்பில் 43வது படைப்பிரிவு அமைப்பு நடத்திய செய்தியாளர் சந்திப்பில் கருத்து வெளியிட்டும் போதே இவ்வாறு குற்றம் சுமத்தினார்.
ராஜபக்ச குடும்ப உறுப்பினர்களின் இந்த தலையீட்டை நிறுத்த வேண்டும் எனவும் கூறியுள்ளார்.பல்வேறு இடங்களில் பல விதங்களில் எரிபொருளை பெற்றுக்கொள்ளும் நடவடிக்கைகளை நிறுத்தி விட்டு, இலங்கைக்குள் உரிய முறையில் இலங்கை பெட்ரோலியக் கூட்டுத்தாபனத்தில் பதிவு செய்துள்ள நிறுவனங்கள் ஊடாக அதனை செய்ய வேண்டும் எனவும் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பான விரிவான தகவல்களுடன் மேலும் பல செய்திகளை உள்ளடக்கி வருகின்றது இன்றைய காலை நேர செய்திகளின் தொகுப்பு,