வவுனியாவில் மேலும் நான்கு பேருக்கு கோவிட் தொற்று உறுதி
வவுனியாவில் இன்றைய தினம் மேலும் நான்கு பேருக்கு கோவிட் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
வவுனியாவில் கடந்த சில நாட்களாக கோவிட் தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ள நிலையில் பல்வேறு பகுதிகளில் எழுமாறான வகையில் பி.சி.ஆர் பரிசோதனைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.
இந்நிலையில் நேற்றுமுன்தினம் வவுனியாவில் பி.சி.ஆர் பரிசோதனைக்கான மாதிரிகள் பலரிடம் பெறப்பட்டிருந்தது. அதன் முடிவுகள் இன்று கிடைக்கப்பெற்றது. அவர்களில் நான்கு பேருக்கு தொற்று இருக்கின்றமை உறுதி செய்யப்பட்டுள்ளது.
இதேவேளை வவுனியா பொலிஸ் நிலையத்தில் கடமை புரியும் பொலிஸ் உத்தியோகத்தர்
ஒருவருக்கு கெப்பிற்றிக்கொல்லாவை பகுதியில் முன்னெடுக்கப்பட்ட அன்டிஜன்
பரிசோதனையில் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. அவர் சில நாட்களிற்கு
முன்பாக கெப்பிற்றிக்கொல்லாவை பகுதியில் உள்ள அவரது வீட்டிற்கு விடுமுறையில்
சென்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.