வேகமாக வந்த தொடருந்து : பெண்ணொருவரின் விபரீத செயல்! அதிர்ச்சியளிக்கும் காணொளி வெளியானது
வவுனியா - தாண்டிக்குளம் பகுதியில் இன்றையதினம்(27) தொடருந்து வரும் நேரத்தில் கடவையை கடந்த பெண் ஒருவர் தொடர்பான பகீர் காணொளி ஒன்று வெளியாகியுள்ளது.
கடவையை கடக்க முற்பட்ட குறித்தப் பெண் தற்போது படுகாயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
அதிர்ச்சியளிக்கும் செயல்
தொடருந்து கடவையில், சமிக்ஞைகள் இருந்த போதிலும், மோட்டார் சைக்கிளில் பயணித்த குறித்தப் பெண் திடீரென கடவையை கடக்க முற்பட்டுள்ளார்.

அந்தப் பெண் கடவையை கடக்கும் பொழுது தொடருந்தும் அருகில் வந்துவிட மயிரிழையில் அந்தப் பெண் உயிர் தப்பியுள்ளார்.
மோட்டார் சைக்கிளின் ஒரு பகுதி தொடருந்தில் மோதியதுடன், அதனை செலுத்திய குறித்தப் பெண் தூக்கி வீசப்பட்டுள்ளார்.
@tamilwinnews வவுனியாவில் புகையிரதத்துடன் மோதிய மோட்டார் சைக்கிள் - மயிரிழையில் உயிர் தப்பிய பெண்!
♬ original sound - தமிழ்வின் செய்திகள்
இதனால் படுகாயமடைந்த பெண் வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதோடு, குறித்த மோட்டார் சைக்கிளை பொலிஸார் கைப்பறியுள்ளனர்.

தொடருந்து கடவையின் முன்னால் பலர் காத்திருக்கும் பொழுது இந்தப் பெண் மோட்டார் சைக்கிளில் பயணித்து தூக்கி வீசப்பட்டதை அருகில் இருந்த நபரொருவர் தொலைபேசியில் காணொளியாக பதிவு செய்துள்ளார்.
மேலும், சம்பவம் தொடர்பில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
காணொளியை காண இங்கே அழுத்தவும்..
போலீஸில் தப்பித்த ஜனனியால் கலெக்டருக்கு ஏற்பட்ட சிக்கல், குணசேகரன் அடுத்த பிளான்.. எதிர்நீச்சல் தொடர்கிறது புரொமோ Cineulagam
பல வருடங்களுக்கு பிறகு சந்தித்துக்கொண்ட பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் பிரபலங்கள்... யார் யார் பாருங்க Cineulagam