வட்டுக்கோட்டை ஸ்ரீ பேச்சியம்பாள் தேவஸ்தானத்தின் வருடாந்த அலங்கார மகோற்சவம்
அராலி மேற்கு, வட்டுக்கோட்டை, நீளத்திகாடு அருள்மிகு ஸ்ரீ பேச்சியம்பாள் தேவஸ்தானத்தின் வருடாந்த அலங்கார மகோற்சவமானது நேற்றையதினம் வெகு சிறப்பாக ஆரம்பமாகியது.
அந்தவகையில் நேற்று (18) மதியம் அம்பாளுக்கு விசேட அபிஷேக ஆராதனைகள் இடம்பெற்று அன்னதான நிகழ்வு நடைபெபெற்றதுடன் பின்னர் மாலை அலங்கார உற்சவமமும் நடைபெற்றது.
இதன்போது, கருவறையில் வீற்றிருக்கும் பேச்சியம்பாளுக்கு பூஜை வழிபாடுகள் இடம்பெற்ற பின்னர், வசந்த மண்டபத்தில் வீற்றிருக்கும் பேச்சியம்பாளுக்கு விசேட பூஜை வழிபாடுகள் இடம் பெற்றன.
விசேட பூஜை வழிபாடுகள்
பின்னர் அம்பிகை சிங்கவாகனத்தில் வீதியுலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.
மேலும், பூஜை வழிபாடுகளை துஷ்யந்த குருக்கள் தலைமையிலான சிவாச்சாரியார்கள் நடாத்தி வைத்ததுடன் பல்வேறு பகுதிகளிலும் இருந்து வருகை தந்து அம்பாளை தரிசித்த பக்தர்கள் இஷ்ட சித்திகளை பெற்றுச் சென்றனர்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |