கரப்பந்தாட்டத்தில் மாகாணத்தில் 2ஆம் பெற்ற வற்றாப்பளை மகாவித்தியாலய பெண்கள் அணியினரை வாழ்த்திய ரவிகரன் எம்.பி
பாடசாலைகளுக்கிடையிலான மாகாணமட்ட கரப்பந்தாட்ட போட்டியில் இரண்டாமிடத்தைப் பெற்றுக்கொண்ட முல்லைத்தீவு - வற்றாப்பளை மகாவித்தியாலய பெண்கள் அணியினரை வன்னிமாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன் நேற்று (01) நேரில் சென்று வாழ்த்தினார்.
குறிப்பாக 16வயது மற்றும் 18வயது பெண்கள் அணியினரையே நாடாளுமன்ற உறுப்பினர் இவ்வாறு நேரில் சென்று வாழ்த்தியுள்ளார்.
சிக்கல் நிலமைகள்
அத்தோடு போட்டிகளில் பங்கேற்கும்போது எதிர்கொள்ளும் சிக்கல் நிலமைகள் மற்றும் சவால்கள் குறித்தும் வீராங்கனைகளிடமும், பயிற்றுவிப்பாளர், உடற்கல்வி ஆசிரியர் மற்றும் பாடசாலை அதிபரிடமும் நாடாளுமன்ற உறுப்பினர் இதன்போது கேட்டறிந்து கொண்டார்.
அத்துடன் அந்தச் சிக்கல் நிலமைகள், சவால்களை தீர்ப்பதற்கு தம்மாலான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுமெனவும் தெரிவித்தார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |








பிரித்தானியாவின் One in, one out திட்டத்தை கேலி செய்யும் வகையில் நேற்று நிகழ்ந்த விடயம் News Lankasri
