உயிர்த்த ஞாயிறு தாக்குதல்களில் கொல்லப்பட்டவர்கள் நம்பிக்கையின் நாயகர்கள் என்று அறிவிக்கப்படவுள்ளனர்...!
ஆறு ஆண்டுகளுக்கு முன்னர் உயிர்த்த ஞாயிற்றுக்கிழமை தேவாலயங்கள் மீது மேற்கொள்ளப்பட்ட வெடிகுண்டு தாக்குதல்களில் இறந்தவர்களை உண்மைகளின் வீரர்கள் என்று வத்திக்கான் அறிவிக்க உள்ளது.
கட்டுவாபிட்டிய தேவாலயத்தில் வைத்து எதிர்வரும் 20ஆம் திகதியன்று வத்திக்கானில் இருந்து வெளியாகும் இதற்கான அறிவிப்பை, கர்தினால் மல்கம் ரஞ்சித் வாசிப்பார் என்று கத்தோலிக்க தேவாலய தகவல் தொடர்பு இயக்குநர் அருட்தந்தை ஜூட் கிரிசாந்த கூறியுள்ளார்.
நம்பிக்கையின் நாயகர்கள்
நம்பிக்கையின் நாயகர்கள் என்ற 'ஹீரோஸ் ஒஃப் ஃபெய்த்' என்ற சொல்லாடலை, தங்கள் வாழ்க்கையை தியாகம் செய்பவர்களைக் குறிக்கப் பயன்படுத்தும் ஒரு பதமாக கத்தோலிக்க திருச்சபை கருதுகிறது.
இதன்படி உயிர்நீத்தவர்கள், இயேசு கிறிஸ்துவுக்காக தங்கள் வாழ்க்கையை தியாகம் செய்த ஆண்கள் மற்றும் பெண்கள் என்று அறியப்படுவார்கள்.
இதேவேளை, உயிர்த்த ஞாயிறு தாக்குதல்களுக்குப் பின்னால் உள்ள உண்மையை கண்டுபிடிப்பதில் ஏப்ரல் 21ஆம் திகதி வரை அரசாங்கம் என்ன நடவடிக்கை எடுத்தது என்பது குறித்து தேவாலயத்தின் நிலைப்பாட்டுடன் கர்தினாலின் இந்த அறிவிப்பு வெளியாகும் என்று அருட்தந்தை ஜூட் கிரிசாந்த கூறியுள்ளார்.
பிரார்த்தனை ஊர்வலம்
இதற்கிடையில் 2025ஏப்ரல் 21 ஆம் திகதி காலை 7 மணிக்கு புனித லூசியாவில் இருந்து கொச்சிக்கடை புனித அந்தோனியார் ஆலயம் வரை பிரார்த்தனை ஊர்வலம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
காலை 8.30 மணிக்கு தேவாலயத்தில் ஒரு நினைவு நிகழ்வு நடைபெறும், இதில் இராஜதந்திரிகள் உட்பட்ட முக்கிய தலைவர்களும் பங்கேற்பார்கள் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |

சிறகடிக்க ஆசை சீரியல் பாட்டி யார் தெரியுமா.. ஒரு காலத்தில் யாருடன் நடித்திருக்கிறார் பாருங்க Cineulagam
