நாட்டில் புதிதாக 10 இலட்சம் ஏழைகள் - அநுர அரசைக் கடுமையாகச் சாடுகின்றது மொட்டுக் கட்சி

Anura Kumara Dissanayaka Government Of Sri Lanka Sri Lanka Podujana Peramuna Economy of Sri Lanka
By Rakesh Jun 23, 2026 06:32 PM GMT
Report

தற்போதைய அரசு, கடந்த ஒன்றரை முதல் இரண்டு ஆண்டு காலப்பகுதிக்குள் நாட்டில் புதிதாக 10 இலட்சம் ஏழை மக்களை உருவாக்கியுள்ளது என்று ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சம்பத் அத்துகோரள குற்றம் சாட்டியுள்ளார்.

பத்தரமுல்ல நெலும் மாவத்தையிலுள்ள பொதுஜன பெரமுன கட்சியின் தலைமையகத்தில் இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கும் போதே அவர் இதனைக் கூறினார்.

அங்கு அவர் மேலும் தெரிவிக்கையில், “உணவுப் பொருட்கள், மருந்துகள் மற்றும் பாடசாலை உபகரணங்களுக்கான வற் வரியை நீக்குவதாகக் கூறி ஆட்சிக்கு வந்த அரசு, தற்போது அதற்கு நேர்மாறாகச் செயற்பட்டு வருகின்றது.

துன்பங்கள் நிறைந்த இறுதிப் பௌர்ணமி தினம் என்று கூறி ஆட்சிக்கு வந்த இவர்களின் கீழ் 18 பௌர்ணமி தினங்கள் கடந்துவிட்ட போதிலும், நாட்டு மக்களுக்கு எவ்வித நன்மைகளும் கிடைக்கவில்லை. எதிர்வரும் ஜூலை முதலாம் திகதி முதல், மாதமொன்றுக்கு ஒரு இலட்சம் ரூபாவுக்கும் அதிகமாக வியாபாரம் செய்யும் அனைத்து வர்த்தகர்களையும் வற் வரியில் பதிவு செய்ய அரசு தீர்மானித்துள்ளது.

காசாவில் சிறுவர்கள் திட்டமிட்டு இலக்கு வைக்கப்படுவது இனப்படுகொலையே - ஐநா வெளியிட்டுள்ள அறிக்கை

காசாவில் சிறுவர்கள் திட்டமிட்டு இலக்கு வைக்கப்படுவது இனப்படுகொலையே - ஐநா வெளியிட்டுள்ள அறிக்கை

வற் வரி விதிப்பு 

கிராமப்புறங்களில் உள்ள சிறிய கடைகளுக்கும் இந்த வற் வரி விதிக்கப்படும் போது, அந்த வரியை வர்த்தகர்கள் கிராமத்து ஏழை மக்களிடமிருந்தே அறவிடுவார்கள்.


இது அரசின் அனுசரணையுடன் மக்களின் பைக்கற்றுக்களைப் பறிக்கும் ஒரு பகற்கொள்ளையாகும். மகா திறைசேரியில் ட்ரில்லியன் கணக்கில் பணம் இருப்பதாகக் கூறினாலும் ஏழைகளின் இறுதிச் சதமும் சுரண்டப்படுகின்றதே தவிர நிவாரணங்கள் எதுவும் வழங்கப்படவில்லை. நாட்டின் சுகாதாரத் துறை தற்போது முற்றாக வீழ்ச்சியடைந்துள்ளது.

பல முக்கிய புற்றுநோய் மருந்துகளுக்குத் தட்டுப்பாடு நிலவுவதுடன், மருத்துவமனைகளில் நூற்றுக்கணக்கான மருந்து வகைகள் இல்லை. தினசரி ஆயிரத்துக்கும் மேற்பட்ட டெங்கு நோயாளர்கள் பதிவாகி வரும் சூழலில், அவர்களுக்கு மருத்துவமனைகளில் படுக்கை வசதிகள் கூட இல்லை. ஜனாதிபதியால் அதிக நிதி ஒதுக்கப்பட்டு ஆரம்பிக்கப்பட்ட 'கிளீன் ஸ்ரீலங்கா' திட்டம் முற்றிலும் தோல்வியடைந்துள்ளது.

தகுதியற்றவர்களை உள்ளூராட்சி அமைப்புகளுக்கு நியமித்ததால் கழிவு மேலாண்மை சீர்குலைந்து, டெங்கு ஒழிப்பு நடவடிக்கைகளை முன்னெடுக்க முடியாமல் அரசு திணறி வருகின்றது. உலக சந்தையில் கச்சா எண்ணெய் விலை பெருமளவு குறைந்துள்ள போதிலும் அரசு அதன் பலனை மக்களுக்கு வழங்காமல் ஏமாற்றி வருகின்றது.

தீவிரமாக பரவி வரும் டெங்கு நோய்.. வைத்தியசாலை வசதிகளுக்கு பற்றாக்குறை ஏற்படும் நிலை

தீவிரமாக பரவி வரும் டெங்கு நோய்.. வைத்தியசாலை வசதிகளுக்கு பற்றாக்குறை ஏற்படும் நிலை

மக்களின் பணம் 

தற்போதைய நிலவரப்படி பெற்றோல் லீற்றர் ஒன்றிலிருந்து 125 ரூபாவையும், டீசல் லீற்றர் ஒன்றிலிருந்து 110 ரூபாவையும் குறைக்க முடியும். துறைமுகத்துக்குக் கொண்டு வரப்படும் விலைக்கே எரிபொருள் தருவோம் என்று தேர்தல் காலத்தில் கூறியவர்கள், இன்று மக்களின் பணத்தைக் கொள்ளையடிக்கின்றார்கள்.

நாட்டில் புதிதாக 10 இலட்சம் ஏழைகள் - அநுர அரசைக் கடுமையாகச் சாடுகின்றது மொட்டுக் கட்சி | Vat Tax Anura Government 10 Lakhs Poor People

எதிர்வரும் மாத இறுதிக்குள் இந்த விலைக்குறைப்பு கட்டாயம் செய்யப்பட வேண்டும். அரசின் தோல்விகளையும் ஊழல்களையும் மூடிமறைப்பதற்காக அமைச்சர்கள் ஊடகவியலாளர்களையும் பொதுமக்களையும் அச்சுறுத்தி வருகின்றார்கள்.

எரிபொருள் விலையைக் குறைக்குமாறு கேட்டபோது பிரதமர் அது "எண்ணெய் கடை அல்ல" எனக் பொறுப்பற்ற விதமாகப் பதிலளித்துள்ளார். தொழிற்சங்கத் தலைவர் ரஞ்சன் ஜயலால் தாக்கத் தயாராக இருப்பதாகக் கூறுகின்றார்.

பொறுப்பான அமைச்சர் ஒருவர் நாட்டின் விவசாயிகளைக் கசிப்பு வியாபாரிகள் என அவமதித்துள்ளார். அரசு முற்றாகத் தோல்வியடைந்துள்ள நிலையில், 1988, 1989ஆம் ஆண்டு காலப்பகுதியைப் போல் மக்களை ஒடுக்கவும், பயமுறுத்தவும் முயற்சிக்கின்றது." என்றார்.

நாட்டில் புதிதாக 10 இலட்சம் ஏழைகள் - அநுர அரசைக் கடுமையாகச் சாடுகின்றது மொட்டுக் கட்சி | Vat Tax Anura Government 10 Lakhs Poor People   

மரண அறிவித்தல்

வளலாய், Scarborough, Canada

16 Aug, 2026
மரண அறிவித்தல்

ஆனைக்கோட்டை, Markham, Canada

25 Aug, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், வட்டுக்கோட்டை, Toronto, Canada

26 Aug, 2026
மரண அறிவித்தல்

சங்கானை, Toronto, Canada

23 Aug, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

வல்வெட்டித்துறை தீருவில், Mississauga, Canada

03 Sep, 2020
மரண அறிவித்தல்

மண்டைதீவு, London, United Kingdom

17 Aug, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 6ம் வட்டாரம், புங்குடுதீவு, கிளிநொச்சி, கொழும்பு, Crawley, United Kingdom

15 Aug, 2026
மரண அறிவித்தல்

நெடுந்தீவு மேற்கு, வட்டக்கச்சி

28 Aug, 2026
மரண அறிவித்தல்

நெடுந்தீவு மேற்கு, வட்டக்கச்சி, Frutigen, Switzerland

26 Aug, 2026
மரண அறிவித்தல்

மானிப்பாய், Villemomble, France

24 Aug, 2026
மரண அறிவித்தல்

கொக்குவில் கிழக்கு, Munich, Germany

22 Aug, 2026
நன்றி நவிலல்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், சூரிச், Switzerland

30 Jul, 2026
நன்றி நவிலல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

துன்னாலை, கனடா, Canada

30 Aug, 2025
7ம் ஆண்டு நினைவஞ்சலி

சங்கானை, ஆனைக்கோட்டை

30 Aug, 2019
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஆறுமுகத்தான் புதுக்குளம், London, United Kingdom

10 Sep, 2025
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 12ம் வட்டாரம், Geneva, Switzerland

21 Aug, 2024
15ம் ஆண்டு நினைவஞ்சலி

கந்தர்மடம், திருநகர், பிரான்ஸ், France

29 Aug, 2011
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கல்வியங்காடு

30 Jul, 2026
33ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 2ம் வட்டாரம், பிரான்ஸ், France

25 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சரவணை, நீர்வேலி, Brampton, Canada, Ontario, Canada

08 Sep, 2025
மரண அறிவித்தல்

இளவாலை, Gennevilliers, France

27 Aug, 2026
26ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, உருத்திரபுரம்

29 Aug, 2000
2ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், Edgware, United Kingdom

28 Aug, 2024
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புளியங்கூடல், Wilhelmshaven, Germany

01 Aug, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கோப்பாய், நீர்வேலி, Scarborough, Canada

20 Aug, 2024
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Harrow, United Kingdom

21 Aug, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, மன்னார், கொழும்பு

28 Aug, 2021
15ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சுண்டுக்குழி, கொழும்பு, பிரித்தானியா, United Kingdom

31 Aug, 2025
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US