ஆச்சரியத்தை ஏற்படுத்தும் ரணிலின் செயற்பாடு : முன்வைக்கப்படும் விமர்சனம்
மாணவர்களுக்கு மதிய உணவைக் கொடுக்க முடியாத,பொருட்களின் விலையை குறைக்க முடியாத இந்த வங்குரோத்து அடைந்த நாடும் அரசாங்கமும் ஹூதி கிளர்ச்சியாளர்களை அடக்க 250 மில்லியன் செலவிட்டுள்ளது. ஜனாதிபதியின் இந்த நடவடிக்கை ஆச்சரியமளிக்கின்றது என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.
மினுவாங்கொட பகுதியில் நேற்றையதினம் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு கருத்து வெளியிடும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
வங்குரோத்து அடைந்த நாடு
தொடர்ந்தும் தெரிவிக்கையில்,
தற்போது அதிகரிக்கப்பட்டுள்ள பெறுமதி சேர் வரி ஊழல்வாதிகளைப் பாதுகாக்கும் வரியாகும். ஊழல் மிக்க ஆட்சியாளர்கள் ஒவ்வொரு துறையிலும் கொள்ளையடித்ததன் காரணமாகவே நாடு வங்குரோத்தடைந்தது. இவ்வாறு கொள்ளையடித்தவர்களிடமிருந்து பணத்தை மீட்பதற்கு பதிலாக, அவர்கள் அரசாங்கத்தால் பாதுகாக்கப்படுகின்றனர். எனவே இந்த வற் வரியை ஊழல் நிறைந்த வரி என்று அழைக்கலாம்.
தற்போதைய ஜனாதிபதி ஊழல்வாதிகளின் வாக்குகளால் தேர்ந்தெடுக்கப்பட்டதால் ஊழல்வாதிகளை பாதுகாத்து வருகிறார். இதன் காரணமாக பொதுஜன பெரமுனவின் 134 பேரும் கூறுவதற்கு ஏற்ப கைப்பாவை போன்று அவர் செயற்படுகின்றார்.
செங்கடலில் ஹூதி கிளர்ச்சியாளர்களின் நடவடிக்கைகளால் நமது நாட்டில் பொருட்களின் விலை அதிகரிப்பதால், 250 மில்லியன் ரூபா செலவிட்டு இலங்கை கடற்படைக் கப்பலை ஈடுபடுத்தி, இந்த ஹூதி கிளர்ச்சியாளர்களுக்கு எதிராக போராட தீர்மானித்துள்ளதாக ஜனாதிபதி அண்மையில் தெரிவித்தார்.
உலகில் அபிவிருத்தியடைந்த நாடுகள் இருக்கும் போது இந்த வங்குரோத்து நாடு ஏன் இவ்வாறான செயலைச் செய்ய முன்வருகிறது என்பது ஆச்சரியமளிக்கிறது.
மாணவர்களுக்கு மதிய உணவைக் கொடுக்க முடியாத,பொருட்களின் விலையை குறைக்க முடியாத இந்த அரசாங்கம் ஹூதி கிளர்ச்சியாளர்களை அடக்க 250 மில்லியன் செலவிட்டுள்ளது.
நாடு வங்குரோத்து நிலையில் இருக்கும் வேளையில் முன்னுரிமையளிக்க வேண்டிய பல விடயங்கள் இருந்த போதிலும் ஜனாதிபதி வேறு விடயத்தில் கவனம் செலுத்தியுள்ளார்.
எந்த வித சிறப்புரிமைகளும் சலுகைகளும் வழங்காமலே ஐக்கிய மக்கள் கூட்டணிக்கு பல்வேறு தரப்புகளை ஒன்றிணைத்துக் கொள்கின்றது.
ஐக்கிய மக்கள் சக்தி பணத்தையோ அல்லது சலுகையோ வழங்காது. ஏனைய தலைவர்களைப் போன்று மக்களுக்கு சேவையாற்ற நான் அதிகாரத்தை கேட்கவில்லை என குறிப்பிட்டுள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |

சிறகடிக்க ஆசை சீரியல் பாட்டி யார் தெரியுமா.. ஒரு காலத்தில் யாருடன் நடித்திருக்கிறார் பாருங்க Cineulagam
