அரசாங்கத்தின் முடிவால் மக்களுக்கு அதிகரிக்கும் சுமை : அரசாங்கத்திற்கு எதிராக நடத்தப்பட்ட பூஜை
ஜனவரி முதலாம் திகதி முதல் நடைமுறைக்கு வரும் வகையில் நாட்டில் வற் வரி திருத்தம் நடைமுறைக்கு வந்துள்ளது.
ஏற்கனவே 15 சதவீதமாக இருந்த வற் வரி இந்த வருடம் ஆரம்பம் முதல் 18 சதவீதமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இதனைத் தொடர்ந்து நாட்டில், பல்வேறு பொருட்கள் மற்றும் சேவைகளின் கட்டணங்கள் வெகுவாக அதிகரித்துள்ளதோடு பொது மக்கள் பாரிய பாதிப்பினை எதிர்நோக்க ஆரம்பித்துள்ளனர்.
இதேவேளை, வரி அதிகரிப்பு தொடர்பில் சாதக மற்றும் பாதக விவாதங்களும் தற்போதைய அரசியல் மேடைகளில் இடம்பெற்று வரும் நிலையில், பொதுமக்களும் தங்களது எதிர்ப்புக்களை வெளியிட ஆரம்பித்துள்ளனர்.
மக்களுக்கு ஏற்பட்டுள்ள நெருக்கடி நிலை
இந்தநிலையில், காலியில் உள்ள ஆலயம் ஒன்றில் அரசாங்கத்திற்கு எதிராக பூஜை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
பிட்டிகல கல்கடுல்ல தேவலாயத்தில் இவ்வாறு பூஜை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
வரி அதிகரிப்பிற்கு எதிர்ப்பு தெரிவித்தும், ஆட்சியாளர்களுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையிலும் இந்த பூஜை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
மக்கள் பணத்தை அழித்தவர்களுக்கு தண்டனை வழங்கக் கோரி இதன்போது வழிபாடு மேற்கொள்ளப்பட்டுள்ளது.

வருமான வரித் திணைக்களத்திற்கு நிதி அமைச்சு வழங்கியுள்ள இலக்கு : அதிகரிக்கும் வரி செலுத்துவோரின் எண்ணிக்கை
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |

6 நாள் முடிவில் அஜித்தின் குட் பேட் அக்லி திரைப்படம் தமிழகத்தில் செய்துள்ள வசூல்.. எவ்வளவு தெரியுமா? Cineulagam

Optical illusion: உங்கள் கண்களை ஒரு நிமிடம் குருடாக்கும் மாயை...இதில் இருக்கும் இலக்கம் என்ன? Manithan

சத்யாவிற்கு ஊசி போடப்போன சிட்டி, முத்துவிற்கு வந்த போன், பிறகு.. சிறகடிக்க ஆசை பரபரப்பு எபிசோட் புரொமோ Cineulagam

என்ன கொடுமை இது, நான் சீரியல் பார்ப்பதை நிறுத்திவிட்டேன்.. எதிர்நீச்சல் சீரியல் ரசிகர்கள் புலம்பல் Cineulagam
