இலங்கையர்களுக்கு கட்டாயமாக்கப்பட்டுள்ள நடைமுறை : அனைவரும் வரி செலுத்த வேண்டியதில்லை
18 வயதுக்கு மேற்பட்ட அனைவரும் வருமான வரி கோப்பு ஒன்றை ஆரம்பிக்க வேண்டும் என்பது கட்டாயமாகப்பட்டிருக்கிறது. இதன் மூலம் வருமான வரி கோப்பு ஆரம்பிப்பவர்கள் அனைவரும் வரி செலுத்த வேண்டும் என்பதல்ல. அது தவறான கருத்து என ஐக்கிய தேசியக் கட்சியின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஆஷூ மாரசிங்க தெரிவித்துள்ளார்.
ஐக்கிய தேசியக் கட்சியின் தலைமையகமான சிறிகொத்தவில் இன்று(3) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.
அதிகரித்த வரி
தொடர்ந்தும் தெரிவிக்கையில்,
வரி அதிகரிப்பை அரசாங்கம் விருப்பத்துடன் செய்யவில்லை. கடந்த அரசாங்கத்தின் தூரநோக்கற்ற தீர்மானங்களே வரி அதிகரிக்க காரணமாகும்.
ஜனவரி முதலாம் திகதியில் இருந்து நூற்றுக்கு 15ஆக இருந்த வற்வரி நூற்றுக்கு 18ஆக அதிகரிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக சில பொருட்களின் விலை மற்றும் சேவை கட்டணம் அதிகரிக்கப்பட்டுள்ளது.
தண்டப்பணம் விதிக்கப்படுமா..?
18 வயதுக்கு மேற்பட்ட அனைவரும் வருமான வரி கோப்பு ஒன்றை ஆரம்பிக்க வேண்டும் என்பது கட்டாயமாக்கப்பட்டிருக்கிறது. இதன் மூலம் வருமான வரி கோப்பு ஆரம்பிப்பவர்கள் அனைவரும் வரி செலுத்த வேண்டும் என்பதல்ல. அது தவறான கருத்து.
மாறாக யாராவது எதிர்காலத்தில் வாகனம் அல்லது காணி வாங்குவதாக இருந்தால் அவரிடம் வருமான வரி இலக்கம் இருக்க வேண்டும். அதற்காகவே இதனை கட்டாயப்படுத்தி இருக்கிறோம்.
மாதத்துக்கு ஒரு இலட்சம் ரூபாவுக்கு அதிக வருமானம் உள்ளவர்களே வரி செலுத்த வேண்டி ஏற்படுகிறது. அத்துடன் வருமான வரி கோப்பு ஆரம்பிக்காதவர்களுக்கு 50ஆயிரம் ரூபா தண்டப்பணம் விதிக்கப்படுவதாக சிலர் தெரிவித்து வருகின்றனர். அதில் எந்த உண்மையும் இல்லை என குறிப்பிட்டுள்ளார்.
you may like this
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |