நடைமுறைக்கு வந்துள்ள வற் வரி திருத்தம் : இலங்கையில் திடீரென அதிகரித்த இறக்குமதிகள்
ஜனவரி முதலாம் திகதி முதல் நடைமுறைக்கு வந்த வற் வரி அதிகரிப்பின் மூலம் அதிக அனுகூலங்களை பெற்றுக்கொள்ளும் நோக்கில் கடந்த இரண்டு வாரங்களில் இலங்கைக்கான இறக்குமதிகள் பாரியளவில் அதிகரித்திருந்தன என நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாப்பிட்டிய தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் மேலும் குறிப்பிடுகையில்,
வற் வரி அதிகரிப்பு மூலம் குழம்பிய குட்டையில் சிலர் மீன் பிடிக்க முயற்சிக்கின்றனர். தேவையற்ற அதிக இலாபம் பெறும் நோக்கில் நாட்டின் தேவைக்கு அதிகமாக பொருட்களை அவர்கள் இறக்குமதி செய்து வருகின்றனர்.
அதிகரித்துள்ள இறக்குமதிகள்
கடந்த இரண்டு வாரங்களில் இறக்குமதிகள் 50 முதல் 60 வீதம் வரை அதிகரித்துள்ளது. நாளாந்தம் நாட்டிற்கு கொண்டுவரப்படும் கொள்கலன்களின் எண்ணிக்கை சுமார் 7000ஆக அதிகரித்துள்ளது.
இலங்கை துறைமுகங்களுக்கு தினசரி அதிகபட்சமாக 1000 கொள்கலன்கள் வந்தடையும். கடந்த இரண்டு வாரங்களில் அது 1700 ஆக உயர்ந்துள்ளது. இது ஒரு அசாதாரண மற்றும் எதிர்பாராத அதிகரிப்பு ஆகும்.
பண்டிகைக் காலத்திற்கான இறக்குமதிகள் அக்டோபர் மற்றும் நவம்பர் மாதங்களில் வந்து சேர்ந்ததால் பண்டிகைக் காலத்தின் தேவையைப் பூர்த்தி செய்ய இந்த இறக்குமுதி அதிகரிப்பு இருக்கவில்லை. இந்த அதிகரித்த இறககுமதிகள் வற் அதிகரிப்பின் நன்மையைப் பெறுவதற்காக மட்டுமே இருந்தது.
சில பொருட்களுக்கு 18 வீத வற் வரி விதிக்கப்பட்டது. மேலும் சிலவற்றின் மீதான வற் வரி 15 வீதத்தில் இருந்து 18 வீதமாக 3 வீதத்தால் அதிகரிகப்பட்டது.
கடந்த இரண்டு வாரங்களில் இறக்குமதி செய்யப்பட்டு வந்து குவிந்த பொருட்களில் பெரும்பாலானவை இதுவரை வற் வரி விதிக்கப்படாதவை ஆகும் என தெரிவித்துள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |