அமைச்சரவைக் கூட்டங்களில் கலந்துகொள்ள மாட்டேன்! - ஜனாதிபதிக்கு அமைச்சர் எழுதிய கடிதம்
ஜனநாயக இடதுசாரி முன்னணியின் தலைவரும், நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு அமைச்சருமான வாசுதேவ நாணயக்கார, அமைச்சரவைக் கூட்டங்களில் கலந்துகொள்ளப் போவதில்லை என ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவுக்கு கடிதம் மூலம் அறிவித்துள்ளார்.
அமைச்சர் பதவியில் இருந்து நீக்கப்பட்ட விமல் வீரவன்ச மற்றும் உதய கம்மன்பில ஆகியோருக்கு நீதி கிடைக்கும் வரை அமைச்சுப் பதவிகளில் இருந்து விலகிக் கொள்வதாக அவர் ஜனாதிபதிக்கு எழுதியுள்ள கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.
இது குறித்து கொழும்பு ஆங்கில ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.
அண்மையில் கொழும்பில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் நாணயக்கார தனது நிலைப்பாட்டை மக்களுக்கு தெளிவுபடுத்தினார். இந்த ஊடகவியலாளர் சந்திப்பில் வீரவன்ச, கம்மன்பில மற்றும் ஆளும் கூட்டணியில் அங்கம் வகிக்கும் கட்சிகளின் தலைவர்கள் கலந்துகொண்டனர்.
நாணயக்கார மற்றும் ஏனைய கட்சித் தலைவர்கள் கருத்து வேறுபாடுகளை களைய பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவுடன் வெள்ளிக்கிழமை மாலை கலந்துரையாடல் ஒன்றை நடத்தினர். எவ்வாறாயினும், கூட்டத்தின் முடிவு இன்னும் தெளிவாகத் தெரியவில்லை.

Viral Video: வீட்டிற்குள் பதுங்கியிரு்நத நல்ல பாம்பு... காப்பாற்றி தண்ணீர் கொடுக்கும் இளைஞர் Manithan

Super Singer: Duet Round சுற்றில் நடுவர்களை வியக்க வைத்த போட்டியாளர்கள்- இறுதி நடந்த குழப்பம் Manithan
