அமைச்சர் வசந்த சமரசிங்கவுக்கு நீதிமன்றத்தில் வழக்கு இல்லையா: விமல் வீரவன்ச கேள்வி
எதிர்த்தரப்பில் உள்ளவர்கள் எல்லோரும் நீதிமன்ற வழக்குகளில் பிணையில் விடுவிக்கப்பட்டவர்கள் என்றால் அமைச்சர் வசந்த சமரசிங்கவின் நிலை என்ன என்று விமல் வீரவன்ச கேள்வியெழுப்பியுள்ளார்.
கொழும்பில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பொன்றில் அவர் இந்தக் கேள்வியொன்றை முன்வைத்துள்ளார்.
தொடர்ந்தும் கருத்து வெளியிட்ட அவர், எதிர்க்கட்சித் தரப்பில் உள்ளவர்கள் பிணையில் இருப்பவர்கள் அல்லது சந்தேகத்திற்குரியவர்கள் என்று அரசாங்கம் குற்றம் சாட்டுகின்றது.
விசாரணை
அரசாங்கத்தின் பேரணி ஒன்றில் ஜனாதிபதிக்கு பின்னால் அமைச்சர் வசந்த சமரசிங்க நின்றார். அவ்வாறெனில் அமைச்சர் வசந்த சமரசிங்க பிணையில் இருப்பவரா அல்லது சந்தேகத்திற்குரியவரா என்ற கேள்வி எழுகின்றது.

தங்களுக்கு சவால் விடுக்கக்கூடியவர்களைப் பல்வேறு சம்பவங்களில் சிக்கவைத்து சிறையிலடைக்க தற்போதைய அரசாங்கம் முயற்சிக்கின்றது.
மேலும், தற்போதைய அரசாங்கத்தின் 'கிரிப்டோகரன்சி சொத்துக்கள்' மற்றும் 'மூன்று மாடி வீடுகள்' குறித்து, அடுத்து ஆட்சிக்கு வரும் அரசாங்கமே விசாரணை நடத்த வேண்டியிருக்கும் என்றும் விமல் வீரவன்ச தொடர்ந்தும் குறிப்பட்டுள்ளார்.