வசந்த முதலிகேவை உடனடியாக விடுதலை செய்ய வேண்டும்: நுவரெலியாவில் கையெழுத்து போராட்டம்(Photos)
கைது செய்யப்பட்டுள்ள அனைத்து பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் ஏற்பாட்டாளர் வசந்த முதலிகேவை உடனடியாக விடுதலை செய்ய வேண்டும் என கோரி நுவரெலியாவில் கையெழுத்துப் போராட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.
நுவரெலியா பிரதான பேருந்து தரிப்பிடத்திற்கு முன்பாக நேற்று (24.01.2023) இந்த கையெழுத்துப் போராட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.
கையொப்பம் இடும் நடவடிக்கை
நுவரெலியாவில் “கோட்டா கோ கம” இளைஞர்கள், பல்கலைக்கழக மாணவர்கள் மற்றும் சில சிவில் அமைப்புகள் இணைந்து இதனை ஏற்பாடு செய்துள்ளனர்.
இந்த கையொப்பம் இடும் நடவடிக்கையில் ஐக்கிய மக்கள் சக்தியின் நுவரெலியா
தொகுதி அமைப்பாளர் திணேஷ் கிருசாந்த, நுவரெலியா மாநகரசபை தேர்தலில்
போட்டியிடும் ஐக்கிய மக்கள் சக்தியின் உறுப்பினர்கள் உள்ளிட்ட பலர்
கலந்துக்கொண்டு
கையொப்பமிட்டுள்ளனர்.





பதினாறாவது மே பதினெட்டு 5 நாட்கள் முன்

Super Singer: Grand Finale வொர்ட்டிங் அதிரடி மாற்றம்.. முதல் இடத்தை தட்டித்தூக்கிய போட்டியாளர் Manithan
