வசந்த முதலிகே உள்ளிட்ட எட்டு மாணவர்களுக்கு பிணை
களனி பல்கலைக்கழகத்திற்கு முன்பாக இடம்பெற்ற ஆர்ப்பாட்டத்தின் போது பொலிஸாரின் கடமைக்கு இடையூறு விளைவித்த குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட அனைத்து பல்கலைக்கழகங்களின் அழைப்பாளர் வசந்த முதலிகே உள்ளிட்ட 07 பேரை பிணையில் விடுவிக்க மஹர நீதவான் சமன் பரனலியனாகம இன்று (19.05.2023) உத்தரவிட்டுள்ளார்.
தடுத்து வைக்கப்பட்டுள்ள களனி பல்கலைக்கழக மாணவர் செயற்பாட்டாளர்களை விடுதலை செய்யுமாறு கோரி பல்கலைக்கழகங்களுக்கு இடையிலான மாணவர் ஒன்றியம் நேற்று இரவு களனி பல்கலைக்கழகத்திற்கு முன்பாக ஆர்ப்பாட்டம் ஒன்றை ஏற்பாடு செய்திருந்தது.
பொலிஸாரின் பணிக்கு இடையூறு
இதன்போது பல்கலைக்கழக மாணவர்கள் தீப்பந்தங்களை ஏந்தியவாறு பேரணியாக கொழும்பு - கண்டி வீதியை நோக்கிச் செல்ல ஆரம்பித்ததுடன், அங்கு பொலிஸார் பலத்த பாதுகாப்புடன் ஈடுபடுத்தப்பட்டிருந்தனர்.
இதன்போது பொலிஸாரின் பணிக்கு இடையூறு விளைவித்த குற்றச்சாட்டின் பெயரில் வசந்த முதலிகே உள்ளிட்ட 07 பேர் கைது செய்யப்பட்டிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.



