ரணிலின் கைதின் பின் இந்திய புலனாய்வை திணற வைத்த அநுரவின் புலனாய்வு
ஒரு இயக்கத்தை நடத்துவது போலவே ஜேவிபி அரசாங்கம் ஆட்சியையும் நடத்துவதாக பிரித்தானியாவை சேர்ந்த இராணுவ ஆய்வாளர் அரூஸ் தெரிவித்துள்ளார்.
இலங்கையின் கிராம மட்டங்களில் ஜேவிபியின் பிரசாரங்கள் மேற்கொள்ளப்படுகின்றன.
அத்துடன், கிராம மட்டங்களில் மதங்களின் இளைஞர் அணிகள், கோவில் குழுக்கள் மற்றும் கிராம சபை உறுப்பினர்கள் ஆகிய எல்லாவற்றிலும் ஜேவிபியின் உறுப்பினர்கள் உள்ளனர்.
அவர்கள் புலனாய்வுத் துறை அதிகாரிகளாகவே இருப்பார்கள் என அரூஸ் கூறியுள்ளார்.
இந்தியாவின் புலனாய்வுத் துறையும் மக்களோடு மக்களாக இருந்தே செயற்படுவார்கள்.
அந்தவகையில், முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் கைது, இந்தியப் புலனாய்வுத் துறையை இலங்கை புலனாய்வுத் துறை தோற்கடித்தமைக்கான ஒரு சான்று என அரூஸ் குறிப்பிட்டுள்ளார்.
இவை தொடர்பில் முழுமையாக ஆராய்கின்றது எமது ஊடறுப்பு நிகழ்ச்சி,
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |



