தனிநபரால் சட்டவிரோதமாக ஆக்கிரமிக்கப்பட்டுள்ள வரவுபிலவு குளம்! சீரமைக்குமாறு துரைரசா ரவிகரன் எம்.பி வலியுறுத்து

Thurairajah Raviharan
By Shan Apr 22, 2026 05:25 AM GMT
Report

 தனிநபர் ஒருவரால் சட்டவிரோதமாக ஆக்கிரமிக்கப்பட்டுள்ள முல்லைத்தீவு -ஒட்டுசுட்டான் கமநலசேவை நிலையத்தின்கீழான பெரியஇத்திமடு கமக்கார அமைப்பு பிரிவிலுள்ள வரவுபிலவு குளத்தினை விடுவிப்பதுடன், குறித்த குளத்தினைச்சீரமைப்புச்செய்து விவசாயிகளின் பயன்பாட்டிற்கு கையளிக்குமாறு முல்லைத்தீவு மாவட்ட செயலாளரிடம் வன்னிமாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் துரைரசா ரவிகரன் வலியுறுத்தியுள்ளார்.

இந்நிலையில் குறித்த விடயப் தொடர்பில் தம்மால் உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படுமென முல்லைத்தீவு மாவட்டசெயலாளர் உமாமகேஸ்வரன் பதிலளித்துள்ளார்.

விவசாயிகளால் கோரிக்கை 

வரவுபிலவு குளத்தின்கீழ் நெற்செய்கை மேற்கொள்ளும் விவசாயிகளின் அழைப்பையேற்று 20.04.2026நேற்று குறித்த பகுதிக்கு நேரடியாகச் சென்ற நாடாளுமன்ற உறுப்பினர் ரவிகரன் தனிநபரால் சட்டவிரோதமாக ஆக்கிரமிக்கப்பட்டு சீரமைக்கப்படாதுள்ள வரபு பிலவுக்குளத்தினைப் பார்வையிட்டிருந்தார்.

இதன்போது குறித்த குளத்தினை விடுவிப்புசெய்வதுடன், சீரமைத்துத்தருமாறு விவசாயிகளால் இதன்போது கோரிக்கை விடுக்கப்பட்டது.

தனிநபரால் சட்டவிரோதமாக ஆக்கிரமிக்கப்பட்டுள்ள வரவுபிலவு குளம்! சீரமைக்குமாறு துரைரசா ரவிகரன் எம்.பி வலியுறுத்து | Varuvupilavu Pond Renovate Ravigaran Mp

இந்நிலையிலேயே 21.04 2026இன்று நாடாளுமன்ற உறுப்பினரால் குறித்த விடயம் முல்லைத்தீவு மாவட்ட செயலாளரின் கவனத்திற்கு கொண்டுவரப்பட்டிருந்தது. இதுதொடர்பில் மேலும் தெரியவருகையில், குறிப்பாக வரபுபிலவுக் குளத்தின் குளக்கட்டு உடைப்பெடுத்த நிலையில் நீண்டகாலமாக சீரமைக்கப்படாது கைவிடப்பட்டநிலையில் காணப்பட்டது.

இந்நிலையில் குறித்த குளத்தின் கீழுள்ள 78ஏக்கர் வயல் நிலங்களுக்குமுரிய 16பயனாளிகள் பெரும்போக மானாவாரி நெற்செய்கையினையே தற்போது மேற்கொண்டுவருகின்றனர்.

 நாடாளுமன்ற உறுப்பினர் ரவிகரன்

இவ்வாறான சூழலில் குறித்த குளத்தை சீரமைப்புச் செய்து தமது பயன்பாட்டிற்கு கையளிக்குமாறு தொடர்ச்சியாக உரியதரப்பினரிடம் தாம் கோரிக்கை விடுத்துவந்தபோதும், அக்குளத்தினைச் சீரமைப்பதற்கு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படவில்லையென அப்பகுதி விவசாயிகள் நாடாளுமன்ற உறுப்பினர் ரவிகரனிடம் முறையிட்டிருந்தனர்.

இத்தகையசூழலில் தனிநபர் ஒருவர் குறித்த வரபுபிலவுக் குளத்தின் 20ஏக்கர்வரையிலான நீரேந்துபகுதியைச் சட்டவிரோதமாக ஆக்கிரமிப்புச்செய்து கடந்த மூன்று வருடங்களாக நெற்செய்கையில் ஈடுபட்டுவருவதாகவும் விவசாயிகளால் நாடாளுமன்ற உறுப்பினரின் கவனத்திற்கு கொண்டுவரப்பட்டது.

தனிநபரால் சட்டவிரோதமாக ஆக்கிரமிக்கப்பட்டுள்ள வரவுபிலவு குளம்! சீரமைக்குமாறு துரைரசா ரவிகரன் எம்.பி வலியுறுத்து | Varuvupilavu Pond Renovate Ravigaran Mp

எனவே தனிநபரால் ஆக்கிரமிக்கப்பட்டுள் வரபுபிலவுக் குளத்தினை விடுவிப்புச் செய்வதுடன், சிறுபோக நெற்செய்கையினையும் மேற்கொள்வதற்கு ஏற்றவாறு குறித்த குளத்தை சீரமைப்புச் செய்வதற்கும் நடவடிக்கை மேற்கொள்ளுமாறும் அப்பகுதி விவசாயிகள் நாடாளுமன்ற உறுப்பினரிடம் கோரிக்கை விடுத்தனர்.

இந்நிலையில் விவசாயிகளின் கோரிக்கையைக் கேட்டறிந்துகொண்ட நாடாளுமன்ற உறுப்பினர், குறித்த பிரச்சினைதொடர்பில் தம்மிடம் எழுத்துமூலமாக கோரிக்கை கைடிதமொன்றினைக் கையளிக்குமாறு கேட்டுக்கொண்டார்.

 தனிநபர் ஆக்கிரமிப்பு

அத்தோடு விவசாயிகளால் முன்வைக்கப்பட்ட கோரிக்கைகள் தொடர்பில் தம்மால் கவனம் செலுத்தப்படுமெனத் தெரிவித்திருந்தார்.

அந்தவகையில் 21.04.2026இன்று முல்லைத்தீவு மாவட்ட செயலாளரை நேரில் சந்தித்த நாடாளுமன்ற உறுப்பினர் ரவிகரன், தனிநபர் ஆக்கிரமித்துள்ள குறித்த வரபுபிலவு குளத்தினை விடுவிப்புச் செய்வதற்கு உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு வலியுறுத்தியதுடன், குறித்த குளத்தினைச் சீரமைப்புச் செய்து விவசாயிகளிடம் ஒப்படைப்பதற்குரிய நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட வேண்டுமெனவும் வலியுறுத்தினார்.

தனிநபரால் சட்டவிரோதமாக ஆக்கிரமிக்கப்பட்டுள்ள வரவுபிலவு குளம்! சீரமைக்குமாறு துரைரசா ரவிகரன் எம்.பி வலியுறுத்து | Varuvupilavu Pond Renovate Ravigaran Mp

இந்நிலையில் குறித்து விடயங்கள் தொடர்பில் தம்மால் கவனஞ்செலுத்தப்படுமென முல்லைத்தீவு மாவட்ட செயலாளரால் இதன்போது நாடாளுமன்ற உறுப்பினரிடம் தெரிவிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Gallery
மரண அறிவித்தல்

மாவிட்டபுரம், மல்லாகம், Lewisham, United Kingdom, Harrow, United Kingdom

08 Jun, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வல்வெட்டித்துறை

23 May, 2025
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

தம்பிலுவில், இணுவில் மேற்கு, Kenton, United Kingdom, இணுவில் கிழக்கு

06 Jun, 2026
மரண அறிவித்தல்

அரியாலை, London, United Kingdom

03 Jun, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

புங்குடுதீவு, Frankfurt, Germany

06 Jun, 2026
மரண அறிவித்தல்

ஆவரங்கால், India, ஈரான், Iran, பிரான்ஸ், France, Herborn, Germany

30 May, 2026
மரண அறிவித்தல்

யாழ் மாதகல் வடக்கு, Jaffna, Viborg, Denmark

09 Jun, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

தேனி, India, சென்னை, India

10 Jun, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

உடுப்பிட்டி, Markham, Canada

10 Jun, 2016
5ம் ஆண்டு நினைவஞ்சலி

இடைக்காடு, London, United Kingdom

06 Jun, 2021
3ம் ஆண்டு நினைவஞ்சலி

Holland, Netherlands, Amsterdam, Netherlands

12 Jun, 2023
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, கொழும்பு

13 Jun, 2023
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 12ம் வட்டாரம், பேர்ண், Switzerland, Toronto, Canada

10 Jun, 2021
மரண அறிவித்தல்

வயாவிளான், அளவெட்டி

08 Jun, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

மயிலிட்டி, Yishun, Singapore, Stouffville, Canada

13 Jun, 2023
5ம் ஆண்டு நினைவஞ்சலி

மண்டைதீவு 1ம் வட்டாரம், கோண்டாவில் மேற்கு

04 Jun, 2021
11ம் ஆண்டு நினைவஞ்சலி

ஆவரங்கால், London, United Kingdom

10 Jun, 2015
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், ஜெர்லாஃபிங்கன், Switzerland

05 Jun, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

தாவடி தெற்கு கொக்குவில், Lenzburg, Switzerland, Staufen, Switzerland

22 May, 2025
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Croydon, United Kingdom

08 Jun, 2026
16ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Thun, Switzerland

08 Jun, 2010
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கொடிகாமம், வெள்ளாம்போக்கட்டி, புளியம்பொக்கணை, வவுனியா, கொழும்பு

11 May, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 4ம் வட்டாரம், புங்குடுதீவு 5ம் வட்டாரம், செட்டிக்குளம், பேர்லின், Germany

04 Jun, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வவுனியா, Bristol, United Kingdom

08 Jun, 2024
மரண அறிவித்தல்

மீசாலை, Lucerne, Switzerland

06 Jun, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மருதங்கேணி, யோகபுரம், பளை, யாழ்ப்பாணம், சென்னை, India

08 May, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, கிளிநொச்சி, Zürich, Switzerland

05 Jun, 2022
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US