டொலர் கையிருப்பை அதிகரிப்பதில் அரசாங்கம் தோல்வி!
தேசிய மக்கள் சக்தி ஆட்சியின் கீழ் கடந்த ஒரு வருட காலத்தினுள் மிகச் சொற்பமான டொலர் தொகையொன்றே கையிருப்பாக சேமிக்கப்பட்டுள்ளதன் காரணமாகவே தற்போதைய டொலர் நெருக்கடி ஏற்பட்டுள்ளதாக முன்னாள் ஆளுநர் ரஜித் கீர்த்தி தென்னகோன் தெரிவித்துள்ளார்.
அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது, கடந்த 2025ஆம் ஆண்டின் மாரச் மாதத்தில் அந்நியச் செலாவணிக் கையிருப்பு, 6,531 மில்லியன் டொலராக இருந்துள்ளது.
நடப்பு ஆண்டின் ஏப்ரல் இறுதி வரையான காலப்பகுதிக்குள் குறித்த கையிருப்பு தொகை 6,759 மில்லியன் டொலராக மிகச் சிறிதளவே அதிகரித்துள்ளது.
டொலர் தொகை
அதாவது ஒரு வருடத்திற்கும் மேற்பட்ட காலப்பகுதிக்குள் வெறும் 220 மில்லியன் அளவான டொலர் தொகையே கையிருப்பில் சேர்ந்துள்ளது.

மத்திய வங்கியின் அறிக்கையின் பிரகாரம் 2023-2024-காலப்பகுதியில் ஒவ்வொரு மாதமும் 175 மில்லியன் டொலர் அளவுக்குக் கையிருப்பை அதிகரிக்க முடிந்துள்ளமை தெளிவாகின்றது.
ஆனால் தற்போதைய ஆட்சியின் கீழ் ஒருங்கிணைந்த பரந்த பண விநியோகம் (M2b) 2.1 டிரில்லியன் டொலராக அதிகரித்த பின்னரும், கையிருப்பு தேக்க நிலையில் உள்ளது.
சர்வதேச நாணய நிதியம்
இந்த மாதம் 27-ஆம் திகதி, இலங்கையின் வரவுசெலவுத் திட்டத்திற்கு நிதியளிப்பதற்காக சர்வதேச நாணய நிதியம் 700 மில்லியன் டொலர் வழங்கத் திட்டமிட்டுள்ளது. ஆனால் அந்தப் பணம் கையிருப்பை அதிகரிப்பதற்காகப் பயன்படுத்தப்படாமல், திறைசேரியின் அன்றாடச் செயல்பாடுகளுக்கு (வரவுசெலவுத் திட்டக் கட்டுப்பாடு) பயன்படுத்தப்படும்.

கையிருப்பை உருவாக்குவதற்கு அதைப் பயன்படுத்த முடியாது என்றும் ரஜித் கீர்த்தி தென்னகோன் தொடர்ந்தும் சுட்டிக்காட்டியுள்ளார்.