வனாத்தவில்லு வெடிபொருள் வழக்கு : கஃபூர் மாமாவுக்கு 12 ஆண்டுகள் கடூழிய சிறைத் தண்டனை
புத்தளம் வனாத்தவில்லுவ பகுதியில் 2019ஆம் ஆண்டில், வெடிபொருட்கள் மற்றும் தடைசெய்யப்பட்ட பொருட்களைப் சேமித்து வைத்திருந்த வழக்கின் 3ஆவது பிரதிவாதியான முகமது ரீப் ஆதம் லெப்பே (அல்லது ‘கஃபூர் மாமா’) என்பவருக்கு 12 ஆண்டுகள் கடூழிய சிறைத்தண்டனை விதித்து கொழும்பு மேல் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
கொழும்பு மேல் நீதிமன்றின் 3 நீதிபதிகள் கொண்ட ஆயத்தின் முன் பிரதிவாதி தனது குற்றங்களை இன்று ஒப்புக்கொண்டார்.
எஞ்சிய சிறைத்தண்டனையை அனுபவிக்க
இதனைத் தொடர்ந்து, அவருக்கு 5 குற்றச்சாட்டுகளுக்கு தலா 12 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது. இந்த தண்டனைகளை ஒரே நேரத்தில் அனுபவிக்க உத்தரவிடப்பட்டதால், அவரது ஒட்டுமொத்த சிறைத்தண்டனை 12 ஆண்டுகள் ஆகும்.
அவர் ஏற்கனவே விளக்கமறியலிலும் தடுப்புக்காவலிலும் கழித்த 7½ ஆண்டுகள் தண்டனைக் காலத்திலிருந்து கழிக்கப்படும். இதனால், அவர் சுமார் 4½ ஆண்டுகள் மட்டுமே எஞ்சிய சிறைத்தண்டனையை அனுபவிக்க வேண்டும்.

பிரதிவாதி வழக்கை நீடிக்காமல் குற்றத்தை ஒப்புக்கொண்டமை மற்றும் அவரது 63 வயதை கருத்திற்கொண்டு இந்த தண்டனை நிர்ணயிக்கப்பட்டதாக நீதிமன்றம் அறிவித்துள்ளது.
6 பிரதிவாதிகளுக்கு எதிராக
இந்தநிலையில், 6ஆவது பிரதிவாதியான முகமது ரமீஸ் முகமது சாஜித் (அல்லது ‘சாஜித் மௌலவி’) குற்றத்தை ஒப்புக்கொள்வது குறித்து தீர்மானிக்க அவகாசம் கோரியுள்ளார்.
அவரது முடிவை அறிய வழக்கு நாளைய தினம் (29) காலை 8.00 மணிக்கு மீண்டும் எடுத்துக்கொள்ளப்படவுள்ளது.

இந்த வழக்கில், சட்டமா அதிபரால் 6 பிரதிவாதிகளுக்கு எதிராக 13 குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டிருந்த நிலையில், இதுவரை 5 பிரதிவாதிகள் குற்றத்தை ஒப்புக்கொண்டு தண்டனை பெற்றுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
இதேவேளை,கேகாலை மற்றும் மட்டக்களப்பு மேல் நீதிமன்றங்களில் கஃபூர் மாமாவிற்கு எதிராக நிலுவையில் உள்ள இரு வேறு வழக்குகளுக்காக அவரை முன்னிலைப்படுத்தும்போது அவருக்கு சிறப்பு பாதுகாப்பு அளிக்குமாறு அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
பிக்பாஸ் 10வது சீசனை தொகுத்து வழங்கிய ரம்யா கிருஷ்ணன் வாங்கிய சம்பளம்... எவ்வளவு தெரியுமா? Cineulagam
பட்டத்து இளவரசரின் படுகொலை... திகிலூட்டும் 3 கணிப்புகளை வெளியிட்ட அமெரிக்க நாஸ்ட்ராடாமஸ் News Lankasri