இலங்கையின் வல்வெட்டித்துறையில் மட்டுமே இராட்சத புகைக்குண்டு பறக்கவிடும் நிகழ்வு (Photos)
யாழ். வல்வை அருள்மிகு முத்துமாரியம்மன் ஆலய வருடாந்த மகோற்சவத்தின் இறுதி நாள் அனுஷ்டிக்கப்பட்டுள்ளது.
சித்திரை பௌர்ணமி தினமான இன்றைய தினம் (05.05.2023) காலை நடைபெற்றுள்ளது.
தீர்த்தோற்சவத்தை சிறப்பிக்கும் முகமாக ஊறணி தீர்த்தக்கடற்கரையில் இராட்சத புகைக்குண்டு பறக்கவிடும் நிகழ்வும் இடம்பெற்றுள்ளது.
தனிச்சிறப்பு
இந்த புகைக்குண்டு பறக்கவிடுதல் என்பது இலங்கையில் வல்வெட்டித்துறையில் மட்டுமே இடம்பெற்று வருவது தனிச்சிறப்பு வாய்ந்தது.
மட்டக்களப்பு
இந்துக்களின் மிக முக்கியத்துவம் வாய்ந்த நாள்களில் இன்றைய சித்திரா பௌர்ணமி முக்கியமானதாகும்.
சித்திரா பௌர்ணமியை முன்னிட்டு ஆலயங்களில் இன்றைய தினம் விசேட பூஜைகள் நடைபெற்றன.
இதற்கமைய கிழக்கிலங்கையின் வரலாற்று சிறப்புமிக்க
மட்டக்களப்பு அமிர்தகழி ஸ்ரீமாமாங்கேஸ்வரர் ஆலயத்தில் விசேட பூஜைகள் நடைபெற்றன.
இதன்போது ஆலயத்தில் சித்திரகுப்தனார் கதை பாடப்பட்டு ஆலயத்தில் சித்திரை கஞ்சி காய்ச்சப்பட்டு விசேட பூஜைகள் நடைபெற்றன.
மட்டக்களப்பு மாவட்டத்தின் பல பகுதிகளிலுமிருந்து ஆயிரக்கணக்கான மக்கள் மாமாங்கேஸ்வரர் ஆலயத்திற்கு வருகைதந்து வழிபாடுகளை முன்னெடுத்தமை குறிப்பிடத்தக்கது.
செய்தி-குமார்


