வீழ்ச்சியடையும் இலங்கை ரூபாவின் பெறுமதி
கடந்த வாரத்துடன் ஒப்பிடுகையில் இன்று (20) அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாவின் பெறுமதி மேலும் வீழ்ச்சியைப் பதிவு செய்துள்ளது.
இலங்கை மத்திய வங்கி (CBSL) இன்று (20) வெளியிட்டுள்ள நாணய மாற்று விகிதங்களின் படி, அமெரிக்க டொலர் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 292.29 ரூபாவாகவும், விற்பனைப் பெறுமதி 300.81 ரூபாவாகவும் பதிவாகியுள்ளது.
டொலர் மற்றும் பவுண்ட் பெறுமதி
இதேவேளை ஸ்ரேலிங் பவுண்ட் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 354.77 ரூபாவாகவும், விற்பனைப் பெறுமதி 368.48 ரூபாவாகவும் பதிவாகியுள்ளது.

யூரோ ஒன்றின் கொள்முதல் பெறுமதி 298.92 ரூபாவாகவும், விற்பனைப் பெறுமதி 311.37 ரூபாவாகவும் பதிவாகியுள்ளது.
மேலும், கனேடிய டொலர் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 200.86 ரூபாவாகவும், விற்பனைப் பெறுமதி 209.45 ரூபாவாகவும் பதிவாகியுள்ளது.
அவுஸ்திரேலிய டொலர் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 179.49 ரூபாவாகவும், விற்பனைப் பெறுமதி 188.86 ரூபாவாகவும் பதிவாகியுள்ளது.
வங்கிகளில் டொலரின் பெறுமதி
இந்நிலையில், கடந்த வாரத்துடன் ஒப்பிடுகையில், வங்கிகளில் இன்று (20) அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாவின் பெறுமதியும் மேலும் வீழ்ச்சியடைந்துள்ளது.

செலான் வங்கியில், அமெரிக்க டொலரின் கொள்முதல் பெறுமதி ரூ. 291.75 முதல் ரூ. 292.25 இற்கும் விற்பனை பெறுமதி ரூ. 299.75 முதல் ரூ.300.25 முறையே பதிவாகியுள்ளது.
NDB வங்கியின் கூற்றுப்படி, அமெரிக்க டொலரின் கொள்முதல் விகிதம் மாறாமல் ரூ. 292.75 மற்றும் விற்பனை விலை ரூ. 302.75 பதிவாகியுள்ளது.
இதேவேளை அமெரிக்க டொலரின் கொள்முதல் மற்றும் விற்பனை விகிதங்கள் ரூ.291.49 மற்றும் ரூ. 301.95.முறையே மாறாமல் இருப்பதாக மக்கள் வங்கி தெரிவித்துள்ளது.
கொமர்ஷல் வங்கியில், அமெரிக்க டொலரின் கொள்முதல் பெறுமதி ரூ. 290.43 முதல் ரூ. 290.94 வரையிலும் விற்பனை பெறுமதி ரூ. 300.25 முதல் ரூ. 300.50 என்றவாறாகக் காணப்படுகிறது.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
ஈழத் தமிழர்களின் விடுதலைக்கான பாதையை யார் வழிநடத்துவது.. 18 மணி நேரம் முன்
இந்த வாரம் ஞாயற்றுக்கிழமை சன் டிவியில் ஒளிபரப்பாகும் மூன்று திரைப்படங்கள்.. பிளாக்பஸ்டர் மூவிஸ் Cineulagam
ஐந்து வருடமாக ஏற்பட்ட துரோகம், மன உளைச்சல்! விஜய் மீது அடுக்கடுக்காக சங்கீதா வைத்த குற்றச்சாட்டு Manithan
அந்த நடிகை வெளியிட்ட போட்டோ.. எனக்கும் என் குழந்தைகளுக்கும் அவமானம்: விஜய் மீது சங்கீதா அடுக்கடுக்கான புகார் Cineulagam
காந்திமதியை வீட்டைவிட்டு துரத்திய சக்திவேல், கோமதி தரமான செயல்... பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியல் Cineulagam
ட்ரம்ப் எந்த நேரத்திலும் முடிவெடுக்கலாம்... ஈரானில் இருந்து தூதரக அதிகாரிகளை வெளியேற்றிய பிரித்தானியா News Lankasri
விஜய்க்கு நடிகையுடன் தொடர்பு; விவாகரத்துக்கு காரணமே இதுதான் - குற்றச்சாட்டுகளை அடுக்கிய சங்கீதா News Lankasri