வடமராட்சி வல்லிபுரம் ஆழ்வார் ஆலய சமுத்திர தீர்த்த உற்சவம்
வரலாற்று சிறப்பு மிக்க வடமராட்சி வல்லிபுரம் ஆழ்வார் ஆலய சமுத்திர தீர்த்த உற்சவம் சிறப்பாக இடம்பெற்றுள்ளது.
வல்லிபுரத்து ஆழ்வாருக்கு நேற்று(17) பிற்பகல் 3 மணியிலிருந்து விசேட பூசைகள் இடபெற்றதை தொடர்ந்து வசந்த மண்ட பூசை நடைபெற்றுள்ளன.
சமுத்திர தீர்த்த திருவிழா
இதையடுத்து, 5:14 மணியளவில் வல்லிபுரத்து ஆழ்வார் ஆஞ்சநேயர் முன்னேவர தொடர்ந்து விநாயகரும் அவரை தொடர்ந்து மகாலக்ஷ்மியும் வர வல்லிபுரத்து சக்கரத்து ஆழ்வார் கற்கோவளம் கடற்கரையில் பல்லாயிரம் அடியவர்கள் சூழ சமுத்திர தீர்த்தமாடியுள்ளார்.
கடந்த 02ஆம் திகதியன்று கொடியேற்ற பெருந்திருவிழா ஆரம்பமாகி நேற்று 17ஆம் திகதி திருவிழாவான சமுத்திர தீர்த்த திருவிழாவிற்கு நாட்டின் பல்வேறு பகுதியில் இருந்தும் அடியவர்கள் பல்லாயிரம் பேர் கலந்துகொண்டுள்ளனர்.
இதன்போது, பல அடியார்கள் தூக்கு காவடி, பால் காவடி, அங்க பிரதிஷ்டை, பால்குடம் போன்ற பல்வேறு நேற்றிக்கடன்களையும் நிறைவேற்றியுள்ளனர்.
இதேவேளை, மக்களுக்கு உரிய சுகாதார மற்றும் அடிப்படை வசதிகளை பருத்தித்துறை பிரதேச சபை, பருத்தித்துறை சுகாதார வைத்திய அதிகாரி பணிமனைகளும் வழங்கியிருந்ததுடன் மக்களுக்கான பாதுகாப்பு மற்றும் ஒழுங்குகளை பருத்தித்துறை பொலிஸாரும் மேற்கொண்டுள்ளனர்.
இந்துமாகடல் அரசியலில் தமிழர் வகிபாகம் என்ன..! 2 நாட்கள் முன்
சக்தியை முடித்த சந்தோஷத்தில் குணசேகரன், என்ன செய்வது என்ற பதற்றத்தில் ஜனனி...எதிர்நீச்சல் தொடர்கிறது ஸ்பெஷல் புரொமோ Cineulagam
2007ஆம் ஆண்டு தீபாவளிக்கு வெளிவந்த அழகிய தமிழ் மகன், வேல், பொல்லாதவன் படங்கள்.. பாக்ஸ் ஆபிஸ் வசூல் எவ்வளவு தெரியுமா? Cineulagam