வரலாற்றுச் சிறப்பு மிக்க வடமராட்சி வல்லிபுர ஆழ்வார் ஆலய தேர் உற்சவம்
வரலாற்றுச் சிறப்பு மிக்க வடமராட்சி வல்லிபுரம் ஆழ்வார் ஆலய தேர் உற்சவம் இன்று (16) சிறப்பாக இடம்பெற்றுள்ளது.
காலை 7 மணியிலிருந்து விசேட பூசைகள் இடபெற்று அதனை தொடர்ந்து வசந்த மண்டப பூசை நடைபெற்றது.
தொடர்ந்து 9:30 மணியளவில் வல்லிபுரத்து ஆழ்வார் ஆஞ்சநேயர் முன்னேவர விநாயகரும் அவரை தொடர்ந்து மகாலக்ஷ்மியும் வர வல்லிபுரத்து சக்கரத்து ஆழ்வார் பெருந்தேரில் வலம்வந்தார்.
சமுத்திர தீர்த்த உற்சவம்
கடந்த 02.09.2024 அன்று கொடியேற்ற பெருந்திருவிழா ஆரம்பமாகி இன்று 15ம் திருவிழாவான தேர்த்திருவிழாவிற்கு நாட்டின் பல்வேறு பகுதியில் இருந்தும் அடியவர்கள் பல்லாயிரம் பேர் கலந்து கொண்டனர்.

பல அடியார்கள் தூக்கு காவடி, பால்க்காவடி, அங்க பிரதஸ்டை, பால்குடம் போன்ற பல்வேறு நேற்றிக்கடன்களையும் நிறைவேற்றினர்.
இதேவேளை மக்களுக்கு உரிய சுகாதார மற்றும் அடிப்படை வசதிகளை பருத்தித்துறை பிரதேச சபை, பருத்தித்துறை சுகாதார வைத்திய அதிகாரி பணிமனைகளும் வழங்கியிருந்ததுடன் மக்களிறக்கான பாதுகாப்பு மற்றும் ஒழுங்குகளை பருத்தித்துறை பொலிஸாரும் மேற்கொண்டிருந்தனர்.
நாளைய தினம் பிற்பகல் 3:00மணியளவில் சமுத்திர தீத்த உற்சவமும் இடம்பெறவுள்ளது.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |

சிதைக்கப்பட்ட 10,000க்கும் மேற்பட்ட இலக்குகள்: நிலைகுலைந்து நிற்கும் ஈரான்: அமெரிக்கா தகவல் News Lankasri
30 ஆண்டுகள் கழித்து உருவாகும் திரிகிரக யோகம்: ஏப்ரலில் இந்த ராசிகளுக்கு ராஜ வாழ்க்கை உறுதி! Manithan
அய்யனார் துணை சீரியலில் அடுத்து நடக்கப்போகும் ஸ்பெஷல் கொண்டாட்டம்... படப்பிடிப்பு தள போட்டோ Cineulagam
முகம் மெலிந்த நிலையில் மனைவியுடன் வெனிசுலா ஜனாதிபதி மதுரோ: நியூயார்க்கில் நடந்த விசாரணை News Lankasri
ரயில் நிலையத்தில் படுத்துறங்கிய லாரி ஓட்டுநர் மகன் - RCB அணியின் நம்பிக்கை நட்சத்திரம் News Lankasri