ரணில் அரேபியா சுல்தானா : கேள்வி எழுப்பிய அநுர
தான் ஆட்சியில் நீடிக்காத வரை, எரிபொருள் தட்டுப்பாட்டை தவிர்க்க முடியாது என்று ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்த கூற்றுக்களை தேசிய மக்கள் சக்தியின் தலைவர் அநுரகுமார திஸாநாயக்க கடுமையாக விமர்சித்துள்ளார்.
பிரசாரக்கூட்டம் ஒன்றில் உரையாற்றிய அவர், “ரணில் விக்ரமசிங்க ஒரு அரேபிய சுல்தானா?” என்று கேள்வி எழுப்பியுள்ளார்.
டொலரின் பெறுமதி உயரும்
ரணில் விக்ரமசிங்கவின் தலைமையால் மட்டுமே எரிபொருள் நெருக்கடியைத் தடுக்க முடியும் என்ற கருத்தை அவர் நிராகரித்துள்ளார்.
அத்தகைய கூற்றுக்கள் அரசியல் கட்டுப்பாட்டை தக்கவைக்க பொதுமக்களின் அச்சத்தை கையாளும் முயற்சிகள் என்று அநுரகுமார தெரிவித்துள்ளார்.
தேசிய மக்கள் சக்தி அதிகாரத்தைப் பெற்றால், ரூபாய்க்கு எதிரான டொலரின் பெறுமதி உயரும் என்று விக்ரமசிங்க கூறுவதையும் அநுரகுமார திஸாநாயக்க உறுதியாக மறுத்துள்ளார்.
தேசிய மக்கள் சக்தியின் ஆளுகையின் கீழ், ரூபாய் நிலைப்படுத்தப்படும் என்று அநுரகுமார திஸாநாயக்க உறுதியளித்துள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |

பதினாறாவது மே பதினெட்டு 3 நாட்கள் முன்

விண்வெளியில் இருந்து கூட அமெரிக்காவை தாக்க முடியாது - கோல்டன் டோமை அறிமுகம் செய்த டிரம்ப் News Lankasri

புலம்பெயர்ந்தோரின் குடும்பங்களும் பிரித்தானியாவுக்குள் அனுமதிக்கப்படலாம்: அச்சம் தெரிவித்துள்ள விமர்சகர்கள் News Lankasri
