வங்கக்கடலில் பக்திபூர்வமாக இடம்பெற்ற வல்லிபுர ஆழ்வார் சமுத்திர தீர்த்தோற்சவம்
வரலாற்றுச் சிறப்புமிக்க வல்லிபுர ஆழ்வார் ஆலய வருடாந்த மகோற்சவத்தின் முக்கிய நிகழ்வான சமுத்திர தீர்த்தோற்சவம் நேற்று(26.09.2026) கற்கோவளம் வங்கக்கடலில் பக்திபூர்வமாக இடம்பெற்றது.
ஆலயத்தில் இடம்பெற்ற விசேட பூஜை வழிபாடுகளைத் தொடர்ந்து வல்லிபுர ஆழ்வார், லட்சுமி அம்மன், பிள்ளையார் மற்றும் ஆஞ்சநேயர் ஆகிய தெய்வங்களின் உற்சவ மூர்த்திகள் அலங்கரிக்கப்பட்ட வாகனங்களில் கற்கோவளம் கடற்கரையை நோக்கி எழுந்தருளினர்.
சிற்றாலயத்தில் விசேட பூஜைகள்
கற்கோவளம் கடற்கரையில் அமைந்துள்ள சிற்றாலயத்தில் விசேட பூஜைகள் இடம்பெற்றதைத் தொடர்ந்து, பிற்பகல் சுமார் 4.00 மணியளவில் வங்கக்கடலில் சமுத்திர தீர்த்தோற்சவம் இடம்பெற்றது.

இந்த தீர்த்தோற்சவத்தில் வடமராட்சி மற்றும் யாழ்ப்பாணத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்தும், நாட்டின் ஏனைய பகுதிகளிலிருந்தும் பெருமளவான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.
ஆலய மகோற்சவம்11ஆம் திகதி கொடியேற்றத்துடன் ஆரம்பமாகிய நிலையில், நேற்றுமுன்தினம் தேர்த்திருவிழா இடம்பெற்றது.
நேற்று சமுத்திர தீர்த்தோற்சவம் இடம்பெற்றதைத் தொடர்ந்து இன்று காலை ஆலய வளாகத்தில் உள்ள தீர்த்தக் கேணியில் பட்டுத் தீர்த்தம் இடம்பெறவுள்ளது.








அனோஜனின் விடுதலைக்காக காத்திருக்கும் இலங்கை மக்கள் - புதிய ஜனநாயக மாக்சிச லெனினிசக் கட்சியின் கோரிக்கை
இலங்கையில் இருந்து வெளிநாட்டுக்கு ஆயுத விற்பனை - இறுதிப் போரில் எஞ்சிய வெடிப்பொருட்களுக்கு என்ன நடந்தது...!