யாழ். வலிகாமம் மேற்கு விளையாட்டு போட்டியும் பரிசில் வழங்கலும்!
வலிகாமம் மேற்கு பிரதேச சபையில் பதிவு செய்யப்பட்ட விளையாட்டு கழகங்களுக்கு இடையிலான விளையாட்டு போட்டியும் பரிசில் வழங்கலும், சுழிபுரம் விக்டோரியா கல்லூரியின் விளையாட்டு மைதானத்தில் வெகு சிறப்பாக நடைபெற்றுள்ளது.
நேற்றைய தினம்(30) நடைபெற்ற இந்நிகழ்வின்போது காற்பந்து போட்டியின் இறுதிச் சுற்று நடைபெற்றுள்ளது.
இதில் 0க்கு 1 என்ற அடிப்படையில் துணவியூர் சென் நியூஸ்ரார் கழகத்தை வீழ்த்தி குலனையூர் கலைவாணி விளையாட்டு கழகம் வெற்றி பெற்றுள்ளது.
விளையாட்டு நிகழ்ச்சி
இதனைத் தொடர்ந்து, 4×100 அஞ்சல் ஓட்டம் நடைபெற்றதுடன் விருந்தினர்களின் உரைகளை அடுத்து நினைவுச் சின்னங்களும், பரிசில்களும் வழங்கும் வைபவம் இடம்பெற்றுள்ளது.
அனைத்து விளையாட்டுக்களின் ஒட்டுமொத்த புள்ளிகளின் அடிப்படையில் சுழிபுரம் விக்றோரியன் கழகம் முதலாமிடத்தையும், மூளாய் விக்டோரி அணி இரண்டாவது இடத்தையும் பெற்றுக் கொண்டுள்ளது.
சங்கானை பிரதேச செயலர் கவிதா உதயகுமார் அவர்களது தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில், பிரதேச விருந்தினராக யாழ்ப்பாண மாவட்ட செயலகத்தின் பதில் அரசாங்க அதிபர் மருதலிங்கம் பிரதீபன், சிறப்பு விருந்தினராக யாழ்ப்பாண மாவட்ட விளையாட்டு உத்தியோகத்தர் கதிரவேல் விஜிதரன், கௌரவ விருந்தினர்களாக ஓய்வுபெற்ற உடற்கல்வி உதவிப் பணிப்பாளர் முருகேசு லோகநாதன், விக்டோரியா கல்லூரியின் அதிபர் கணேசமூர்த்தி சுலபாமதி ஆகியோரும் கலந்து சிறப்பித்ததுடன், சங்கானை பிரதேச செயலக உத்தியோகத்தர்கள், விளையாட்டு வீரர்கள் மற்றும் பொதுமக்கள் என பலரும் கலந்துகொண்டுள்ளனர்.





கொடூரமாக தாக்கிய குணசேகரன், ரத்தம் சொட்ட உயிருக்கு போராடும் ஈஸ்வரி.. எதிர்நீச்சல் தொடர்கிறது பரபரப்பு புரொமோ Cineulagam

ஒரே நேரத்தில் ரூ.5000 கோடியை தோளில் சுமக்கும் ஹீரோ.. இப்போது இந்தியாவில் நம்பர் 1 இவர்தானா Cineulagam

அரபு வர்த்தகர்களால் இந்தியாவிற்கு கொண்டு வரப்பட்ட 450 ஆண்டுகள் பழமையான மரம்.., 40 பேர் தங்கலாம் News Lankasri

நிதிஷை, சுதாகர் எப்படி கொலை செய்தார், இனியா சிக்கியது எப்படி... பாக்கியலட்சுமி சீரியல் பரபரப்பு எபிசோட் Cineulagam
