கத்தி குத்து தாக்குதல்களின் எதிரொலி : ஜேர்மனி அரசு எடுத்துள்ள அதிரடி முடிவு
ஜேர்மனி (German) நகரமொன்றில் கத்திக்குத்து சம்பவம் ஒன்றில் மூன்று பேர் கொல்லப்பட்டதைத் தொடர்ந்து ஜேர்மனி அரசு மேற்கொண்டு வரும் அதிரடி நடவடிக்கைகளின் ஒரு பகுதியாக, குறிப்பிட்ட நாட்டவர்களை நாடுகடத்துவதை மீண்டும் தொடங்க அந்நாடு முடிவு செய்துள்ளது.
ஜேர்மனியிலுள்ள சோலிங்கன் (Solingen) நகரில், உள்ளூர் விழா ஒன்றில் நடத்தப்பட்ட கத்திக்குத்து சம்பவத்தில் மூன்று பேர் கொல்லப்பட்டதுடன் 8 பேர் காயமடைந்தார்கள்.
குறித்த தாக்குதல் நடத்தியவர் சிரியா நாட்டவர் என கூறப்படுகிறது.
தாலிபான்கள் ஆட்சி
அத்துடன், ஜூன் மாதத்தில், ஆப்கானிஸ்தான் நாட்டவர் ஒருவர், ஜேர்மன் பொலிஸார் ஒருவரைக் கத்தியால் குத்தியதில் அந்த பொலிஸ் உத்தியோகத்தர் பலியானார்.
இந்நிலையில், ஜேர்மனி குற்றப்பின்னணி கொண்ட ஆப்கான் நாட்டவர்களை நாடுகடத்துவதை மீண்டும் தொடங்கியுள்ளது.
இதனை தொடர்ந்து இன்று(30) அதிகாலை, ஆப்கான் குற்றவாளிகள் 28 பேருடன் விமானம் ஒன்று Leipzig நகரிலிருந்து காபூலுக்குச் சென்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
2021ஆம் ஆண்டு ஆப்கானிஸ்தானில் தாலிபான்கள் ஆட்சியைக் கைப்பற்றியதைத் தொடர்ந்து, மனித உரிமைகள் தொடர்பிலான சந்தேகம் காரணமாக அந்நாட்டவர்களை நாடுகடத்துவதை ஜேர்மனி நிறுத்தியிருந்தது குறிப்பிடத்தக்கது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |

பதினாறாவது மே பதினெட்டு 4 நாட்கள் முன்

பேரக்குழந்தைகளுக்கு தோழியாகவே மாறிவிடும் பாட்டிகள் இந்த ராசியினர் தானாம்... யார் யார்ன்னு தெரியுமா? Manithan

J-35A போர் விமானங்களை பாகிஸ்தானுக்கு அதிவேகமாக அனுப்பும் சீனா., பாதி விலைக்கு ஒப்பந்தம் News Lankasri
