வெலிகம பிரதேச சபை தலைவர் படுகொலை: துப்பாக்கித்தாரிகள் தொடர்பில் வெளியான தகவல்
வெலிகம பிரதேச சபை தலைவர் லசந்த விக்ரமசேகரவை கொலை செய்ய வந்த துப்பாக்கிச்சூடு நடத்தியவர்கள் மாத்தறை நோக்கிச் சென்றுள்ளதாக தெரியவந்துள்ளது.
சம்பவம் தொடர்பாக பிரதேச சபை ஊழியர்கள் பலரிடமிருந்து வாக்குமூலங்கள் பதிவு செய்யப்பட்டதாக விசாரணையை மேற்கொண்ட மூத்த பொலிஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.
சம்பவம் குறித்து விசாரிக்க நான்கு பொலிஸ் குழுக்கள் நிறுவப்பட்டுள்ளன.
நேற்று காலை தனது உத்தியோகபூர்வ அலுவலகத்தில் அடையாளம் தெரியாத துப்பாக்கிதாரியின் துப்பாக்கிச்சூட்டுக்கு இலக்காகி காயமடைந்த வெலிகம பிரதேச சபைத் தலைவர் லசந்த விக்ரமசேகர, மாத்தறை பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
சிசிரிவி காட்சிகளில் அடையாளம்
துப்பாக்கிச் சூடு சம்பவத்திற்காக இரண்டு பேர் மோட்டார் சைக்கிளில் வந்திருந்தமை சிசிரிவி காட்சிகளில் கண்டுபிடிக்கப்பட்டிருந்தது.
துப்பாக்கிச் சூடு நடத்தியவர் வெலிகம பிரதேச சபைக்கு வந்தபோது வெள்ளைச் சட்டை மற்றும் கருப்பு முகமூடி அணிந்த சாதாரண நபராக உடையணிந்து வந்திருந்தார் என்பது சிசிடிவி காட்சிகளில் அடையாளம் காணப்பட்டது.
இதனையடுத்து முன்னெடுக்கப்பட்ட விசாரணைகளில், அவர் துப்பாக்கிச்சூட்டுக்குப் பயன்படுத்திய துப்பாக்கியை மறைத்து வைத்திருந்தது தெரியவந்துள்ளது.
விசாரணைகள் ஆரம்பம்
லசந்த விக்ரமசேகரவின் அலுவலகத்திற்குள் பெண் ஒருவர் சென்று, அவரிடமிருந்து ஒரு கடிதத்தில் கையெழுத்திட்டு வெளியே வந்தபோது, துப்பாக்கிச் சூடு நடத்திய நபர் திடீரென அலுவலகத்திற்குள் நுழைந்து துப்பாக்கிச்சூடு நடத்தியதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
சம்பவத்தில் உயிரிழந்த வெலிகம பிரதேச சபையின் தலைவர் லசந்த விக்ரமசேகர, 38 வயதுடைய மூன்று குழந்தைகளின் தந்தை ஆவார்.
இந்நிலையில், லசந்த விக்ரமசேகரவை கொலை செய்ய வந்த துப்பாக்கிச்சூடு நடத்தியவர்கள் மாத்தறை நோக்கிச் சென்றுள்ளதாக தெரியவந்துள்ளதுடன், விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |





அதிரவைக்கும் திருப்பம்... இஸ்ரேல் மீது கடும் நடவடிக்கை எடுக்க கோரும் உலகளாவிய யூத பிரபலங்கள் News Lankasri

இன்னும் 2 நாட்களில் நடக்கவிருக்கும் புதன் பெயர்ச்சி- தலைவிதியே மாறப் போகும் ராசியினர் யார்? Manithan
