வலி.வடக்கு மக்களின் காணிகளை விடுவிக்கக் கோரி முன்னெடுக்கப்படும் போராட்டத்திற்கு அழைப்பு
வலி.வடக்கு மக்கள் இடம்பெயர்ந்து 37 வருடங்கள் பூர்த்தியைத் தொடர்ந்து உயர் பாதுகாப்பு வலயமாகவுள்ள தமது காணிகளை விடுவிக்க கோரிய கவனயீர்ப்புப் போராட்டம் எதிர்வரும் திங்கட்கிழமை 15 ஆம் திகதி முன்னெடுக்கப்படவுள்ளது.
இஅது தொடர்பில் விடுக்கப்பட்டுள்ள அழைப்பில், "கடந்த 15.06.1990 எமது ஊரில் இருந்து விரட்டப்பட்டு 36 வருடங்கள் 5.06.2026இல் நிறைவடைந்து 37வது வருடத்தில் கால் பதிக்கின்றோம். 2009இல் யுத்தம் நிறைவுற்று 17 வருடங்கள் நிறைவுபட்டுவிட்டது.
தொடர் நடவடிக்கைகள்..
ஆனால், நாம் குறிப்பாக J/248, 1/255 முழுமையாகவும் J/251, J/246இல் (3/2) பகுதி விடுவிக்கப்படவில்லை.
அதனால், பல போராட்டங்கள், சந்திப்புக்கள் நடாத்தியும் எமக்கு பலன் கிடைக்கவில்லை. அகதிகளாகவே வாழ்கின்றோம்.
24.04.2026ஆம் திகதி தொடக்கம் ஒவ்வொரு வெள்ளியும் அறவழியில் தொடர்ந்து போராடி வரும் நாம் வரும் 15.06.2026 ஆம் திகதி மாபெரும் அறவழிப் போராட்டம் ஒன்றை யாழ். அரச அதிபர் முன்றலில் போராட உத்தேசித்துள்ளோம்.
இப்போராட்டத்திற்கு உங்களால் முடிந்த உதவியை செய்து இப்போராட்டத்திற்கு பலம் சேர்க்குமாறு” மயிலிட்டி மீள்குடியேற்ற அபிவிருத்திக் குழு கோரிக்கை விடுத்துள்ளது.
ஏமனில் பெரிம் தீவை கைப்பற்றிய ஹவுதிகள் - உலகளாவிய எண்ணெய் போக்குவரத்துக்கு அச்சுறுத்தல் News Lankasri