அரச வங்கி ATM இயந்திரத்திற்கு கொண்டுவரப்பட்ட பணம் கொள்ளை - சந்தேகநபருக்கு பிறப்பிக்கப்பட்ட உத்தரவு
ஹொரணையில் உள்ள அரச வங்கி ஏடிஎம் (ATM ) இயந்திரத்திற்கு கொண்டுவரப்பட்ட 3 கோடி ரூபாவிற்கும் அதிக பணம் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட வங்கியின் பாதுகாப்பு அதிகாரி ஜூன் 23 திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
ஹொரணை தலைமை நீதிபதி லக்மினி விதானகமகே இந்த உத்தரவை பிறப்பித்துள்ளார்.
சந்தேகநபருக்காக முன்னிலையான வழக்கறிஞர்கள்
நீதிமன்ற உத்தரவின்படி சந்தேகநபரின் மோட்டார் சைக்கிளை ஒப்படைக்கவும், சம்பவத்தின் பாதுகாப்பு கமரா காட்சிகளை நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கவும் நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.

இந்த சம்பவத்தின் முக்கிய சந்தேகநபரான உதவி மேலாளருடன் சந்தேகநபர் நெருங்கிய உறவை பேணி வந்துள்ளதாக நீதிமன்றத்திற்கு குற்றப்புலனாய்வு விசாரணை அதிகாரிகளால் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கிடையில், சந்தேகநபருக்காக முன்னிலையான வழக்கறிஞர்கள், அவர் இந்த சம்பவத்தில் சம்பந்தப்படவில்லை என்று கூறி, ஒரு சுருக்க அறிக்கையை வழங்கியுள்ளனர்.
இச்சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை மேற்கு மாகாண வடக்கு குற்றப்பிரிவு நடத்தி வருகின்றது.