காதலர் தினத்தில் மனதை உருக்கும் ஓர் நிகழ்வு! நினைவற்றவர்களை ரோஜா பூக்களுடன் பார்க்கச் செல்வோர்....
காதலர் தினம் (Valentine's Day) என்றால் கொண்டாட்டங்கள்,சந்தோசங்கள், பரிசுகள் பரிமாற்றங்களே நாம் அநேகமாக கண்டுகளிக்கும் நிகழ்வுகளாகும். ஆனால் ஒவ்வொரு காதலர் தினத்திலும் நடைபெற்றுக் கொண்டிருக்கும் மனதை உருத்தும் கவலை கொள்ள வைக்கும் நிகழ்வுகளும் சாதாரணமாக நடந்த வண்ணமே உள்ளன.
ஒவ்வொரு காதலர் தினத்திலும் ரோஜா மலர்கள் மற்றும் பரிசு பொருட்களுடன் தனது காதலி, காதலனை பார்க்க தேசிய மனநல நிலையத்திற்கு வருவோர் தொடர்பில் நாம் அவதானம் சொலுத்துவதில்லை.
மனதை உருக்கும் கவலை கொள்ளும் நிகழ்வுகள்
மனதை கவலைக் கொள்ள வைக்கும் நிகழ்வு தொடர்பில் தேசிய மனநல நிலையத்தின் பணிப்பாளர் தம்மிக்க அலகப்பெரும தெரிவித்த கருத்துக்கள்:
காதல் தோல்வியால் அல்லது ஏதோ அன்பின் காரணமாக மனநலம் பாதிக்கப்பட்ட இளைஞர், யுவதிகள் நூறுக்கும் மேற்பட்டோர் தேசிய மனநல நிலையத்தில் தங்கியிருந்து சிகிச்சை பெற்று வருகின்றனர்.
அதில் இன்றைய நிலையில் யுவதிகளின் அதிகரிப்பு காணப்படுகிறது. மேலும் 300 மேற்பட்டோர் கிளினிக்குகள் மூலமும் சிகிச்சை பெற்று வருகின்றனர். காதல் தோல்வியை தாங்கி கொள்ள முடியாமல் அதற்கு தீர்வை தேடிகொள்ள முடியாத இளையோர் ஏதோ ஒரு விதத்தில் மனநிலை பாதிப்புக்குள்ளாகின்றனர்.

இளையோர் சிலர் தங்களின் சமூக நிலையால் காதல் தோல்வியை யாருக்காவது சொல்லி மனவலியை போக்கிக் கொள்ள முடியாமல் தனிமைப்படுத்தப்பட்ட நிலையில் மனநிலை பாதிப்புக்கு உள்ளாகின்றனர்.
எங்களிடம் வரும் இளைஞர், யுவதிகளின் மனநிலை பாதிக்கப்பட்டிருக்கு தன்மையை பொறுத்து நாங்கள் சிகிச்சையை வழங்குகிறோம். அவர்களின் தனிப்பட்ட தவரவுகளை நாம் 100 வீதம் பாதுகாக்கிறோம்.

காதலர் தினம் மற்றும் பிறந்த தினம் போன்ற விசேட தினங்களில் இங்கிருக்கும் நோயாளர்களை பார்க்க வருக்கின்றனர். ஆனால் காதலர் தினத்தில் வருவது விசேடமாக நோக்கப்படுகிறது.
மனநிலை பாதிக்கப்பட்டவர்களை பார்க்க வருவதை சிலர் தவறான கண்ணோட்டத்தில் பார்க்கின்றனர். இதுவும் ஒரு நோய்தான். இவர்களை பார்ப்பதில் எவ்வித தப்பும் கிடையாது என்று குறிப்பிட்டார்.
காரை நிறுத்தச்சொல்லி இறங்கி குதித்துவிட்டார்.. தயாரிப்பாளர் கே.ராஜன் தற்கொலை! கதறும் குடுபத்தினர் Cineulagam
என் குரலைக் கேட்பது இதுவே கடைசியாக இருக்கும்... ஈரானில் அதிகரிக்கும் அரசியல் மரணதண்டனைகள் News Lankasri